Nivisha : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’, கலர்ஸ் தமிழின் ‘ஓவியா’ ஆகிய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் சீரியல் நடிகை நிவிஷா. முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பின் சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.
நிவிஷாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரே பொண்ணான நிவிஷாவின் குடும்பத்திற்கு, மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம். ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் பண்ணுவது நிவிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். கல்லூரியில் நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வர, அதுவே பின்னர் சினிமா ஆசையாக மாறியிருக்கிறது. சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதற்குப் பிறகு சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் துறையில் இருப்பது நிவிஷாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குறிப்பாக நிவியின் பாட்டிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனால், அவருக்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்பதால், சாதிக்கக் காத்திருக்கிறாராம்.
ஆனாலும் சீரியல்களில் வரும் வாய்ப்புகள் எல்லாமே வில்லி கதாபாத்திரங்களாக வருகிறதாம். பாசிட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நிவிக்கு இது வருத்தமாக உள்ளதாம். ”‘உன்னுடைய உயரமான , கம்பீரமான’ தோற்றத்துக்கு வில்லி கதாபாத்திரம் தான் நல்ல இருக்கும்ன்னு சொன்ன இயக்குநர்கள், மக்கள் மத்தியிலேயும் நீ சீக்கிரம் பிரபலம் ஆயிடுவே” என்றார்களாம். ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்களில் பாஸிட்டிவ் கதாபாத்திரம் என்று கூறிவிட்டு, போகப்போக படு வில்லியாக மாற்றியதை, நிவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். ஆகையால் அந்த சீரியல்களில் இருந்து விலகினாராம். தற்போது நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.