vijay tv erode mahesh : 'அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த மோட்டிவேஷன் பேச்சாளராக கலக்கி வருகிறார். யூடியூப்பில் வீடியோ பார்ப்பவர்களுக்கு தெரியும்.
Advertisment
ஈரோடு மகேஷ், ஆசிரியர் ப்ளஸ் பேச்சாளர். அதுமட்டுமில்லை தமிழில் (Phd.,) பட்டப் படிப்பை தொடர்கிறார் என்பது கூடுதல் தகவல்.2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளி வந்த “சிகரம் தொடு” என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.அதற்கு பிறகு ஜம்புலிங்கம் 3d, இணையதளம் என சில படங்களில் நடித்து உள்ளார்.
vijay tv erode mahesh : காதல் திருமணம்!
இவரின் முதல் அறிமுகம் சன் டிவி என்றாலும், ஈரோடு மகேஷ் பிரபலமானது விஜய் டிவியில் தன். இவரின் நெருங்கிய நண்பர் தாடி பாலாஜி என்பது ஊருக்கே தெரியும்.
Advertisment
Advertisements
ஈரோடு மகேஷின் அம்மாவுக்கு காது கேட்காது.ஈரோடு மகேஷ் பிறந்ததில் இருந்தே அவரது குரலை அவரது தாய் கேட்டதே இல்லையாம். மகேஷ் தனது இளைக்காலம் முழுவதுமையும் ஈரோட்டில் தான் கழித்தார். பின்பு, அடுத்த வாய்ப்பை தேடி சென்னை வந்தார்.
மகேஷ் , சன் மியூசிக் ஆங்கராக வேலை செய்த ஸ்ரீதேவியை காதலித்து கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு அவர்கள் தாய், மனைவி, மகள் தான் என்று மகேஷ் அடிக்கடி எல்லா மேடையிலும் சொல்லுவார். இவர்கள் மூவரும் தான் அவருடைய வெற்றி பயணத்திற்கு காரணம்.
யூடியூப்பில் மகேஷ் வீடியோக்கள் குறிப்பாக அவரின் மேடைப்பேச்சுகள், மோட்டிவெஷன் ஸ்பீட்ச், இளைஞர்களுக்கு அட்வைஸ் என அனைத்து வீடியோக்களும் ஹிட் தான். தனது மனைவி தாய் தந்தையுடன் மகேஷ் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.