'நெனச்சது நடக்கல, அதனால திருமணம் பண்ணிக்கல’: சீரியல் நடிகை யுவஸ்ரீ

ஒரு கட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் வயசு போயிருச்சு. 

ஒரு கட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் வயசு போயிருச்சு. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Artist Yuvasree, Vijay TV Ponmagal Vandhal

Serial Artist Yuvasree, Vijay TV Ponmagal Vandhal

Serial Artist Yuvasree: தமிழ் சினிமாவிலும், சீரியல்களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை யுவஸ்ரீ. நிறைய சீரியல்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment

லாக்டவுனில் “வீட்டில் தோட்டம் வைக்க” ரெடியா? பொதுமக்களுக்கு சவால்விடும் எஸ்.பி.!

18 வயதில் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய யுவஸ்ரீ தொடர்ந்து படங்களில் நடித்தார். குறிப்பாக `சின்ன தம்பி’ படம் மக்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, சின்னதிரை வாய்ப்பு வந்தது. தூர்தர்ஷனில் வெளிவந்த `நரகாசுரன்’ சீரியல் தான் யுவஸ்ரீ-யின் முதல் சீரியல். சன்டிவியில் கே.பாலச்சந்தரின் `ரகுவம்சம்’ சீரியலிலும் நடித்தார்.

இருப்பினும் முன்பு இருந்த மாதிரி சீரியல் வாய்ப்புகள் தனக்கு இல்லை, என்கிறார் யுவஸ்ரீ. இது குறித்த பேசிய அவர், “நான் ஒய்.ஜி. மகேந்திரன் சாருடைய நாடகக் குழுவில் இருக்கிறேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நாடகம் பண்ற அன்னைக்கு எனக்கு சீரியல் ஷூட் வெச்சிருந்தாங்க. எனக்கு நாடகம் இருக்குன்னு சீரியல் டைரக்டர் கிட்ட அனுமதி கேட்டேன். அப்போ அவர், இல்லங்க நீங்க இருந்து தான் ஆகணும், நாங்க தான் டேட்ஸ் கொடுத்துருக்கோம்ல? நீங்க வேணும்னா டிராமாவில் நடிக்க வேற ஆளை செலக்ட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னார். எனக்கு சிரிப்பு வந்திருச்சு.

Advertisment
Advertisements

நாடகம் பற்றின சரியான புரிதல் கூட அவங்கக் கிட்ட இல்ல. நாடகத்துக்கு எப்படி திடீர்னு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ண முடியும். அது என்ன சீரியல் ஷூட்டிங்கா இன்னைக்கு இல்லன்னா நாளைக்குன்னு ஃபிக்ஸ் பண்றதுக்கு. அதுக்கப்புறம் நிறைய போராடி நாடகத்துல நடிக்கப் போனேன். ஆனா, சீரியல் இயக்குநர்கள சொல்லியும் தப்பில்லைங்க. அவங்க சூழ்நிலை அப்படி. முன்னாடியெல்லாம் சீரியலில் நடிக்கிறப்ப அந்த கேரக்டரை உள்வாங்கி நடிக்க, நமக்கு நிறைய டைம் இருக்கும். இப்போ அப்படி கிடையாது. அவங்க எதிர்பார்க்கிறதை உடனுக்குடன் செய்யணும். இதெல்லாம் விட ஏதாவது கோபமா எதிர்த்துப் பேசிட்டா, உடனே அந்த சீரியலிலிருந்தே தூக்கிடுவாங்க. இதுக்கு மத்தியில்தான் சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்.

என்னுடைய குடும்பச் சூழலுக்காக தான் சீரியல், நாடகத்துல ஓட ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் வயசு போயிருச்சு.  இது தான் நம் வாழ்க்கைன்னு அதையும் ஏத்துக்கிட்டேன். என் உலகமே என் அம்மா தான். இந்த நடிப்புத் துறை எனக்குப் பெரிய சக்சஸ் கொடுக்கலைனாலும் அங்கீகாரத்தைக் கொடுத்துருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ்ன்னு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும். நான் வாய்ப்புகளை எதிர்பார்த்து தான் இருக்கேன்” என்றார்.

’க்யூட்’ பிரியா பவானி சங்கர்: ’ஆஸம்’ ஆண்ட்ரியா – படத் தொகுப்பு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: