விவாகரத்து, காதல் வதந்தி எல்லாம் ஓவர்… சீரியலை விட்டு யூடியூப்பில் பிஸியானார் மேக்னா!

இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

vijay tv ponmagal vandhal serial meghna
vijay tv ponmagal vandhal serial meghna

vijay tv ponmagal vandhal serial meghna : விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழில் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட். கேரளத்து வரவான மேக்னாவை சீதா என்றால் அனைவருக்கு தெரியும். இந்த சீரியல் 2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

தமிழில் கயல் படத்தில் மேக்னா நடித்திருந்தார். பரதநாட்டிய கலைஞரான மேக்னாவுக்கு நடிப்பு, நடனம் என்றால் கொள்ளை பிரியம். தற்போது பொன்மகள் வந்தால் சீரியலில் மேக்னா தான் லீட் ரோல். இந்த சீரியலும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது இவர்களின் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரையில் இவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் மேக்னா தனது கணவரை கடந்த சில மாதத்திற்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்டார். நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார்.இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், மேக்னாவின் முன்னாள் கணவர் டான் டோனி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு மேக்னாவின் ரியாக்‌ஷ என்ன? என்பதை தெரிந்துக் கொள்ள பல ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்தனர். எல்லா கேள்விகளையும் கூலாக எதிர் கொண்டவர் விவகாரத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.

இத்துடன், சீரியலில் மேக்னாவின் ஜோடியாக விக்கி என்பவர் நடித்து வருகிறார். இருவரது ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருப்பதாக வழக்கம்போல் வதந்தி பரவியது. இந்நிலையில் தான் கொரோனா காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அர்ஜூனை பார்த்து ரோஜா கேட்ட கேள்வி…வக்கீலே ஆஃப் ஆயிட்டாப்ல

இந்த நேரத்தில் மேக்னா யூடியூப் சேனலை தொடங்கி பிஸி ஆகினார். ஆரம்பத்தில் மலையாளத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர் இப்போது தமிழிலும் கலக்கிகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv ponmagal vandhal serial meghna vijay tv meghna husband ponmagal vandhal hotstar meghna youtube channel

Next Story
காலையில் கருவேப்பிலை ஜூஸ்: அட, இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே!weight loss, curry leaves for weight loss, kadi patta leaves for weight loss, weight loss and healthy eating, indian express, indian express news, weight loss news, weight loss news in tamil, weight loss latest news, weight loss latest news in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com