/tamil-ie/media/media_files/uploads/2021/06/Vjrup.jpg)
Vijay Tv VJ Ramya Fitness Secrets Tamil News
Vijay Tv VJ Ramya Fitness Secrets Tamil News : 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட மிகவும் ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார் விஜே ரம்யா. நடனம், உடற்பயிற்சி, டயட் என ஏராளமான விஷயங்களைப் பின்பற்றினாலும், தொப்பையைக் குறைக்க எளிய வழி ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார் ரம்யா.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Vjr1.png)
3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை தன்னுடைய சேனலில் கொண்டிருக்கும் ரம்யா, Vlog, ஓர் அவுட், அழகுக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், சமீபத்தில் வயிற்றுப்பகுதியில் அதிகம் சேரும் கொழுப்புகளை ஒரேயொரு பொருளை வைத்து எப்படிக் கரைப்பது என்பதற்கான வழிமுறையைப் பகிர்ந்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Vjr2.png)
அந்த ஒரு பொருள் மற்றும் அதன் ரெசிபியை பகிர்வதற்கு முன்பு, சில டிஸ்க்ளைமரையும் சேர்த்துக்கொண்டார். "இதுபோன்ற ட்ரிங்க் எடுத்துக்கொள்ளும்போது, இந்த ஒரு ரெசிபி போதும் என்றெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனோடு ஆரோக்கியமான டயட், எளிய உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இந்த ஒரு ட்ரிங்கினால் உங்கள் தொப்பை குறைந்திடாது" என்று கூறியதோடு அவருடைய சீக்ரெட் இன்க்ரிடியன்ட்டை பகிர்ந்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Vjr3.png)
"நன்றாக கொதிக்கும் நீரில், இரண்டு துண்டு பட்டை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். அவ்வளவுதான். இதனைக் காலை வெறும் வயிற்றில் ஒரு க்ளாஸ். மதியம் சாப்பிட்டபிறகு அரை மணிநேரம் கழித்து ஒரு க்ளாஸ் மற்றும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு க்ளாஸ் குடித்து வரவேண்டும். இடையில் 2 முறை எப்போதும் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
எனக்குத் தெரிந்து உலகத்திலேயே மிகவும் சிம்பிளான உபயோகமான ரெசிபி இதுதான். இதுபோன்று 10 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறையும். இந்த பட்டை கலந்த நீர், உடலிலுள்ள ஹார்மோனல் கோளாறுகளை சரிசெய்யும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்" என்கிற குறிப்போடு நிறைவாகிறது இந்த காணொளி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.