உடல் எடையைக் குறைக்க இந்த 3 விஷயம் முக்கியம் – விஜே ரம்யா டயட் டிப்ஸ்!

Vijay Tv VJ Ramya Weight Loss Diet Tips காய்கறிகளில் தேவையான அளவு வைட்டமின், ஃபைபர், மினரல்ஸ் எல்லாமே இருக்கின்றன.

Vijay Tv VJ Ramya Weight Loss Diet Tips Tamil News
Vijay Tv VJ Ramya Weight Loss Diet Tips Tamil News

Vijay Tv VJ Ramya Weight Loss Diet Tips Tamil News : நீண்ட ஆண்டுகளாகக் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பராமரித்து வரும் விஜே ரம்யா, தன்னுடைய ஸ்லிம் சீக்ரெட்டை சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை கொண்டிருக்கும் ரம்யா, ஏராளமான ஃபிட்னெஸ் மற்றும் அழகுக் குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார். அதிலும் ஏராளமான டயட் டிப்ஸ்களை ஸர் செய்து வருகிறார். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“கொழுப்பைக் குறைப்பதற்கு முதலில் என்ன உணவுகள் சாப்பிடுறீங்க? எவ்வளவு சாப்புடுறீங்க? எப்போது சாப்புடுறீங்க? என்பது முக்கியம். கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் என்று இருக்கிறதா என்பதிலேயே பலருக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அதேபோல, அவ்வளவாக சாப்பிடுவதே இல்லை. ஆனால், உடல் எடை குறையவே இல்லை என்கிற புகாரும் உள்ளன. உடல் எடையைக் குறைக்கும் உணவு வகைகள் உள்ளன. அவை என்னவென்று இனி பார்க்கலாம்.

பொதுவாகவே உடல் எடையைக் குறைக்க 3 வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்: இஞ்சி, பூண்டு, க்ரீன் டீ, எலுமிச்சை, மஞ்சள் உள்ளிட்டவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மெட்டபாலிசம் இம்ப்ரூவ் செய்ய உதவும். மெட்டபாலிசம் நன்றாக இருந்தாலே, அதிகப்படியான கலோரிகளை குறைக்கும். இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிட்டால் தினமும் 50 கலோரிகள் குறையும். அப்படியென்றால் ஒரு வாரத்தில் எவ்வளவு குறைக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

குறைவான கலோரி மற்றும் ஃபைபர் அதிகமுள்ள உணவுகள் – அதிகமான ஃபைபர் கன்டென்ட் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் கண்டிப்பாக அதிகப்படியான கலோரி குறையும். அந்த வரிசையில், காய்கறிகள் அதிகம் உட்கொள்ளலாம். காய்கறிகளில் தேவையான அளவு வைட்டமின், ஃபைபர், மினரல்ஸ் எல்லாமே இருக்கின்றன. அதேபோல நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் தானாகவே கலோரிகள் குறையும்.

தரமான உணவுகள் – மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு மட்டும் போதாது. அதன் கூடவே, நட்ஸ், விதைகள் மற்றும் பழங்கள் சாப்பிடணும். ஆனால், இவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால், பழங்களில் சர்க்கரை உள்ளது மற்றும் விதைகளில் கலோரிகள் அதிகம். அளவோடு எடுத்துக்கொண்டால் இவை உடலுக்கு மிகவும் நல்லது”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv vj ramya weight loss diet tips tamil news

Next Story
“1-ம் வகுப்பு படிக்கும்போதே ப்ரொபோஸ் பண்ணினார்” – பாவம் கணேசன் நேஹா கவுடா ரியல் லவ் ஸ்டோரிPaavam Ganesan Neha Gowda Real Love Story Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com