Advertisment

பிரமிக்க வைக்கும் திறமை..இரண்டாவது திருமணம்.. போலீஸ் புகார்! விஜய் டிவி நவீன் சீக்ரெட்ஸ்

மிகப் பெரிய டஃப் கொடுத்த போட்டியாளர்கள் ஏராளம் இருந்த போது தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் நவீன் உருவாக்கி கொண்டார்

author-image
WebDesk
Jul 20, 2020 13:45 IST
vijaytv kalakka povathu yaaru naveen

vijaytv kalakka povathu yaaru naveen

vijaytv kalakka povathu yaaru naveen : விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீன் குறித்து அறிமுகமே வேண்டாம். நவீனின் அசாத்திய திறமையை கண்டு வியக்காதவர்களே இல்லை எனலாம். மிமிக்ரி தொடங்கி நடிப்பு பாடி லாங்வேஜ் என கலக்குவார்.

Advertisment

நவீன் பங்கேற்ற சீசனில் அவருக்கு மிகப் பெரிய டஃப் கொடுத்த போட்டியாளர்கள் ஏராளம் இருந்த போது தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் நவீன் உருவாக்கி கொண்டார். அந்த சீசன் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கு நவீன் போன்றவர்களும் ஒருவகை காரணம் எனலாம். இன்றளவு ரசிகர்களால் மறக்க முடியாத கலக்க போவது யாரு சீசனாக உள்ளது.

publive-image

நவீன் கலந்துக் கொண்ட சீசனின் ஃபனல்ஸ் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார். அனைவரின் எதிர்பார்ப்பும் நவீன் வெற்றி பெறுவார் என்று தான் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் குரேஷி டைட்டில் அடித்தார்.

இருந்த போதும், சிவகார்த்திகேயன் மனம் கவர்ந்த போட்டியாளராக நவீனே அறியப்பட்டார். அதன் பின்பு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் தேடி வந்தன. திரைப்படங்களிலும் முகம் காட்டினார். கல்லூரி விழாக்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள தொடங்கினார்.

அப்போது தான் அந்த சர்ச்சை வெடித்தது.  நவீனுக்கும்  திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம். ஆனால்  நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின.

publive-image

நவீனின் முதல் மனைவி திவ்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நவீனின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. நவீனை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

திடீரென்று வைரலான விஜயகுமார் பேத்தி.. அருண் விஜய்யின் அக்கா பொண்ணாம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment