Vinayagar Chathurthi 2019 Celebrations across India photo gallery : இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவில், கோவை பெரிய விநாயகர் கோவில், சிவகங்கை பிள்ளையார்பட்டி போன்ற விநாயகர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்திருக்கும் கொசப்பேட்டையில் விநாயகர் சிலை விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எவ்வளவு விமர்சையாக பக்தர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள் என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் நீங்கள் கண்டு களிக்கலாம்.
மேலும் படிக்க : Ganesh Chaturthi: தமிழக கோவில்களில் விநாயகர் சதுர்த்தி, தலைவர்கள் வாழ்த்து
Vinayagar Chathurthi 2019 Celebrations across India photo gallery : சென்னையில் துவங்கிய விநாயகர் சதுர்த்தி
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களுக்கும், கோவில்களுக்கும் தேவையான விநாயகர்களை புரசைவாக்கம் கொசப்பேட்டையில் வடிவமைத்து விற்பனைக்கு வைப்பது வழக்கம்.
Express photo by Nithya Pandian, 31st August 2019, Chennai.
மும்பையில் கோலாகலமாக துவங்கிய விநாயக சதுர்த்தி
இந்த வருடம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடத்தப்படும். 10 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 12ம் தேதி கடல் அல்லது நீர் நிலையங்களில் கரைக்கப்படும்.
இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக இந்த நாள் கொண்டாடப்பட்டாலும், மும்பையில் மிக மிக கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்படும். தங்களின் வழிபாட்டிற்காக லால்பாக்கில் சிலையை வாங்கி காரில் வைக்கும் குடும்பம்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற பொருட்களால் வடிவமைக்கப்படும் சிலைகளால் இயற்கைக்கு பெரும் மாசுபாடு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத சிலைகளை பலரும் தயார் செய்து வருகின்றனர்.
Express photo by Nirmal Harindran, 1st September 2019, Mumbai.
சுபாஷ் லேனில் அமைந்துள்ள சாய் சேவா கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ள மக்காச்சோள கணபதி. 14 அடி உயரம் கொண்டுள்ள இந்த சிலை முழுக்க முழுக்க உலர்ந்த மக்காச்சோளத்தால் உருவாக்கப்பட்டது.
Express Photo by Amit Chakravarty 29-08-19, Mumbai
குஜராத்தில் விநாயகர் சதுர்த்தி
குஜராத்தின் மித்ரா கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர். முழுக்க முழுக்க விநாயகர் சிலையை மூங்கில்களால் வடிவமைத்துள்ளனர் வடிவமைப்பாளர்கள். இதன் மொத்த உயரம் 9 அடியாகும்.
Express Photo by Amit Chakravarty 29-08-19, Mumbai
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.