Vinayagar Chathurthi 2019 Images: விநாயகர் சதுர்த்தி இந்தியாவில், இந்துக்கள் கொண்டாடும் முக்கியமானப் பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகர் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி விநாயகர் சதுர்த்தி வந்திருப்பதால், கூடுதல் விடுமுறை மக்களுக்கு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க : Vinayagar Chathurthi Pooja: விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு ஏற்ற நேரம் என்ன? உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்க…
Vinayagar Chathurthi 2019 Images: கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்
நாளை மறுநாள் அதாவது, செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், அதற்கான சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
Vinayagar Chathurthi 2019 Images: சாக்லெட் விநாயகர்
லூதியானாவில் பேக்கரி பிஸினஸ் செய்து வரும் ஹரிந்தர் சிங் தயாரித்த 65 கிலோ எடையுள்ள இகோ- ப்ரெண்ட்லி சாக்லெட் விநாயகர்.
Vinayagar Chathurthi 2019 Images: வீடுகளில் தயாராகும் விநாயகர் சிலைகள்
மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து, கை வேலைபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Vinayagar Chathurthi 2019 Images: கடைகளில் விநாயகர் சிலை விற்பனை
மற்ற நகரங்களை விடவும் மும்பை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பிரபலமான ஒன்று. இங்கு நடக்கும் கொண்டாட்டத்தில் பல பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பார்கள். அதோடு ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை கடைகளுக்கு வந்தும் வாங்குவார்கள்.
Vinayagar Chathurthi 2019 Images: மைசூர் பருப்பு விநாயகர்
கலைஞர் ரகுநாத் தாக்கூர் தனது ஒர்க்ஷாப்பில் மைசூர் பருப்பைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு கணபதி சிலையை செய்தார். வரும் 2-ம் தேதி தொடங்கும் இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும்.
Vinayagar Chathurthi 2019 Images: வைர விநாயகர்
ஆர்வத்துடன் இந்த விநாயகர் சிலையை படமெடுக்க காரணம் இருக்கிறது. காரணம், இந்த சிலையில் அமெரிக்க வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு குறைந்தது 8 லட்சம்.
Vinayagar Chathurthi 2019 Images
விநாயகர் சதுர்த்தி பூஜையின் தொடக்கத்தில், விநாயகர் சிலை ஒவ்வொரு நாளும் வழிபடப்பட்டு, அதற்கு காலை மற்றும் மாலையில் ஆரத்தி காட்டப்படுகிறது. பின்னர் அந்த விநாயகர் சிலைகள் வெளியே எடுத்து தண்ணீரில் கரைக்கப்படும்.