vinayagar chathurthi images : விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். தமிழகத்தில் மட்டுமில்லை மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களிலும் விநாயக சதுர்த்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி 2019 : கணபதி ஸ்பெசல் போட்டோ கேலரி
இந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை நாள் என்பதால் கொண்டாட்டங்கள் களைக்கட்டும். குடும்பங்கள் தங்களது இல்லங்களில் விநாயகரை வைத்து வழிப்படுவர்.
சில இடங்களில் இப்போதே கணேஷ் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. அதுக் குறித்த சிறப்பு புகைப்படங்கள் இதோ உங்களுக்காக
விநாயகர் சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, ‘மோதகம்” மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும்
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள், மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளன்று தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.