/tamil-ie/media/media_files/uploads/2021/08/Fitness-card-Virat.jpg)
Virat Kohli fitness goals gym testmatch England Tamil News
Virat Kohli fitness goals gym testmatch England Tamil News : ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சி குறித்து விராட் கோலிக்கு அறிமுகம் தேவையில்லை. அதுபோல, ஒரு நாளையும் தவறவிடாமல் ஜிம்மில் ஆஜராகிவிடுவார். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் விராட், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் பார்பெல் ஸ்னாட்ச் எனும் எடை பயிற்சியின் ஒரு வடிவத்தை நேர்த்தியாகச் செய்வதைக் காணலாம்.
அந்த வீடியோவுடன் "வேலை ஒருபோதும் நிற்காது" எனும் கேப்ஷனையும் இணைத்திருந்தார். அவருடைய இந்த உடற்பயிற்சியின் ஸ்லோ-மோஷன் வீடியோ, 10.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஒருவரின் வலிமையை வளர்க்கும் பயிற்சியாக, ஒரு நபர் தொடர்ச்சியான இயக்கத்தில், தரையிலிருந்து மேல்நிலைக்கு பார்பெல்லை தூக்க வேண்டும். இதில் பயன்படுத்தப்பட்ட நான்கு முக்கிய பாணிகள்: squat snatch (or full snatch), ஸ்ப்ளிட் ஸ்னாட்ச், பவர் ஸ்னாட்ச் மற்றும் மசில் ஸ்னாட்ச். ஸ்குவாட் ஸ்னாட்ச் மற்றும் ஸ்ப்ளிட் ஸ்னாட்ச் ஆகியவை போட்டியில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பாணிகள். அதே நேரத்தில், பவர் ஸ்னாட்ச் மற்றும் மசில் ஸ்னாட்ச் ஆகியவை பெரும்பாலும் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
சமூக ஊடக பயனர்கள் விராட்டின் இந்த பயிற்சியைக் கண்டு ஈர்க்கப்பட்டனர். இருப்பினும், ஸ்னாட்ச் போன்ற பளு தூக்கும் பயிற்சிகள், நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். மோசமான நுட்பம் உடலைக் கடினமாக்கும். மேலும், உடலின் காயத்திற்கு ஆளாக்கும். எனவே, சரியான நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.