விசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்

30 நாட்கள் எந்த விசாக் கட்டணமும் இல்லாமல் செர்பியாவின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.

Visa free country Serbia, Serbia tourism
டனூப் நதிக்கரையில் அமைந்திருக்கும் செர்பிய நகரம் நோவி சட்

Visa Free Country Serbia : இந்தியர்களுக்கு உலகில் 59 நாடுகள் விசா – ஆன் அரைவல் மூலமாக விசா வழங்குகின்றன. சில நாடுகள் மிகவும் குறைந்த விலைக்கு விசாக்கள் வழங்குகின்றன. சில நாடுகள் ஃப்ரீ விசாவில் இந்தியர்களை அழைத்துக் கொள்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் செர்பியா மட்டுமே இந்தியர்களுக்கு விசா-ஃப்ரி சேவையினை வழங்கி வருகிறது. முப்பது நாட்களுக்கு விசாவே இல்லாமல் அந்த நாட்டின் அழகை சுற்றிப் பார்த்து மகிழலாம்.

என்ன இருக்கிறது செர்பியாவில் ?

இரண்டாம் உலகப் போரில் அழிவில் தொடங்கி, கல்லால் ஆன கட்டிடங்கள், கோட்டைகள், அரண்மனைகள், தேவாலயங்கள், பசுமையான கிராமப்புறங்கள் என அசத்தலான அழகியலை கொண்டிருக்கிறது செர்பியா. வரலாற்றில் வரும் ரோமாபுரி மக்களின் நகரங்கள் இன்னும் இங்கு அழியாமல் இருக்கிறது. காட்சிக்கு விருந்தாவது போலவே நிச்சயம் இந்த நாடு அறிவிற்கும் வரலாற்றுத் தேடலின் பசிக்கும் நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும்.

Visa free country Serbia
PC : Poris Ivanovic

விசா – Visa Free Country Serbia

விசாவே வேண்டாம். விமான பயணச்சீட்டு போதும் செர்பியாவின் அழகை ரசிக்க. இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் 78 நாட்டினருக்கு விசா ஃப்ரீ சேவையை வழங்குவதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது செர்பிய நாடு.

பயணிக்க வேண்டிய முக்கிய நகரங்கள்

பெல்கிரேட்

வரலாற்றில், செல்ட்ஸ், ரோமர்கள், சால்வர்கள், பைசாண்டைன்கள், பல்கேரியர்கள், ஆஸ்திரியர்கள், ஹங்கேரியர்கள், துருக்கியர்கள் என பலருக்கு இந்த நகர் மீது கண். அதனால் தான் 115 போர்கள் இங்கே நடைபெற்றிருக்கிறது.

44 முறை தீக்கிரையாகியிருக்கிறது இந்நகரம். இருப்பினும் யாராலும் அசைக்க முடியாத கம்பீரத்துடன் மீண்டும் எழுந்திருக்கிறது பெல்கிரேட். அழகு, கம்பீரம், மற்றும் ஆச்சரியமான கட்டுமான திறன்களின் வெளிப்பாட்டினை இங்கு காணலாம். பெல்கிரேட் கோட்டை, புனித சாவா பேராலயம், புனித மார்க் தேவாலயம் ஆகியவற்றை இந்நகரில் கண்டு ரசிக்கலாம்.

Belgrade, Serbia : Photo courtesy : Nikola Knezevic

நோவி சட்

ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டனூப் நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்நகர் பல்வேறு தேவாலயங்களையும், கோட்டைகளையும் கொண்டிருக்கிறது. புனித ஜார்ஜ் தேவாலயமும், கிப்ரால்ட்டர் என்ற 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையும் இந்நகரில் அமைந்திருக்கிறது.

செர்போனா தேவாலயம், நோவா சட்

ஜ்லாட்டிபோர் எனும் நாட்டுப்புற அழகு

செர்பியாவின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கிறது இந்த அழகிய ஊர். பசுமைப் புல்வெளி போர்த்திய மிகவும் அழகான கிராமப் புறங்களைக் கொண்டிருக்கும் இப்பகுதி இயற்கைக்கும் கலைக்கும் அதிக அளவில் பெயர் பெற்றது. இப்பகுதியில் இருக்கும் மலைத் தொடர்கள் வருடம் முழுவதும் ஹைக்கிங் செல்பவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

ஜ்லாட்டிபோர் மலைத் தொடர்கள்

த்ஜேர்தப் தேசிய பூங்கா

புராதன காலம் முதல் இப்பகுதி இரும்புக் கதவு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள், தூதுவர்கள், மற்றும் போர் புரிய வருபவர்களுக்கு அதிக அளவு தடைகளை ஏற்படுத்தும் இயற்கை அரணாக இருந்தது இப்பகுதி. டானுப் நதியின் அழகினை ரசித்தவாறே இப்பகுதியில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட தாவர வகைகளையும், அரிய வகை விலங்குகளையும் இங்கு காணலாம். பைக்கிங், கயாக்கிங், ஹைக்கிங், பறவைகளின் செயல்களை ரசித்தல், நீச்சல் ஆகியவற்றை செய்ய சரியான இடமாக இது இருக்கும். மேலும் படிக்க விசா ஆன் அரைவல் மூலம் இந்தியர்களுக்கு பர்மிட் தரும் நாடுகள் டாப் 5

த்ஜேர்தப் தேசிய பூங்கா

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Visa free country serbia serbia provides visa free tourism for indians for 30 days

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com