/indian-express-tamil/media/media_files/2025/04/14/VT9uRjzCoh3tlp34UPC6.jpg)
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் அதில் இருக்கும் கஷ்டங்கள் தெரியும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்று சிலர் கருதுகிறார்கள்.
பெரும்பாலும் பிரசவத்திற்கு பின்னர் பெண்களின் உடல் எடை அதிகரித்துக் காணப்படும். இதுவே பலருக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். எனினும், உடல் எடை குறைப்பிற்கான சில டிப்ஸ்களை வி.ஜே. ஆனந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னுடைய உடல் எடையை குறைக்க இந்த முறையை தாம் பின்பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு முதல் குழந்தை பிறந்த போது சுமார் 80 கிலோ உடல் எடையுடன் தான் காணப்பட்டதாக வி.ஜே. ஆனந்தி தெரிவித்துள்ளார். அப்போது, கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் சுமார் 50 கிலோ உடல் எடைக்கு தாம் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இரண்டாவது முறை தனக்கு குழந்தை பிறந்த போது சுமார் 70 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததாக வி.ஜே. ஆனந்தி கூறுகிறார். அதில் இருந்து தற்போது 56 கிலோ உடல் எடையுடன் தாம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் உடற்பயிற்சியின் மூலம் சாத்தியப்பட்டதாக அவர் கூறுகிறார்.
அதிலும், வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக வி.ஜே. ஆனந்தி தெரிவித்துள்ளார். அப்ஸ், ஜம்பிங், டான்ஸ் போன்ற பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். சமீப நாட்களில் அதிகமாக யோகா பயிற்சிகளையும் அவர் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியும் என்றும், அது நம்மை இளமையாக வைத்திருக்கும் என்றும் வி.ஜே. ஆனந்தி அறிவுறுத்துகிறார். எவ்வளவு பிஸியான நாட்களாக இருந்தாலும், வாரத்தில் குறைந்தது 4 அல்லது 5 தினங்களில் யோகா பயிற்சியை தாம் கட்டாயம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.