VJ Keerthy Shanthnu: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர்
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிக்கி என்றழைக்கப்படும் இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கிட் கருவிகள் : தமிழகத்திற்கு உதவிய டாட்டா நிறுவனம்
கீர்த்தியின் உண்மையான பெயர் யோக லட்சுமி. ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமானார். 1987-ல் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. நடன இயக்குநர்கள், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டரும் , கீர்த்தியின் அம்மா, காயத்ரி ரகுராமின் அம்மா ஆகியோர் உடன் பிறந்த சகோதரிகள். கீர்த்தியின் அம்மா ஜெயந்தியும் பலராலும் அறியப்பட்ட நடன இயக்குநராவார்.
கலா மாஸ்டர் நடுவராக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஜூனியர் சூப்பர் ஸ்டார், நாளைய இயக்குநர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிக்கி டான்ஸ் ஸ்டூடியோ’ என்ற நடனப் பள்ளியை சென்னை, தி.நகரில் நடத்தி வருகிறார். கீர்த்தியின் கணவர் சாந்தனுவும் சிறப்பாக நடனமாடுபவர். சமீபத்தில் கூட, விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘வாத்தி கம்மிங் ஒத்து’ என்ற பாடலுக்கு கிக்கி டான்ஸ் ஸ்கூல் சார்பில், சாந்தனு, கீர்த்தி உள்ளிட்டவர்கள் ஆடியிருந்த நடன வீடியோ, பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது.
விதவிதமாக உடையணிவதும், அதை படமாக எடுத்து நினைவுகளில் சேமித்துக் கொள்வதும் கீர்த்திக்கு பிடித்தமான ஒன்று. அப்படியே காதல் கணவர், சாந்தனுவுடன் ஊர் சுற்றுவதும் கீர்த்திக்கு மிகவும் பிடிக்குமாம். அதோடு ரப்பர் போல உடலை வளைத்து, யோகா செய்வதிலும் கீர்த்தி வல்லவர். தென்னிந்திய, பஞ்சாபி உணவுகள் என்றால் கீர்த்திக்கு மிகவும் பிடிக்குமாம்.
உப்புத்தண்ணீரில் வாய் கொப்பளிப்பது கொரோனா பாதிப்பிற்கு தீர்வு தருமா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.