40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கிட் கருவிகள் : தமிழகத்திற்கு உதவிய டாட்டா நிறுவனம்

ஏற்கனவே இந்த நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசிடம் ரூ. 500 கோடியை நிதியாக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. 

By: Updated: April 15, 2020, 03:07:07 PM

TN fights coronavirus Tata donates 40,032 PCR Kits to Tamil Nadu : தமிழகத்திற்கு ரூ. 8 கோடி மதிப்பிலான கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது டாட்டா நிறுவனம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகின்றதை தொடர்ந்து எடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவுகளையும் அதிகரித்துள்ளது தமிழகம்.

டாட்டா நிறுவனம் இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்திற்கு உதவ முன் வந்துள்ளது. ரூ. 8 கோடி மதிப்பிலான 40,032 பி.ஆர்.கருவிகளை டாட்டா நிறுவனம் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க : குணமடையும் நெல்லை : ஒரே நாளில் 13 நபர்கள் கொரோனாவில் இருந்து நலம்!

ஏற்கனவே இந்த நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசிடம் ரூ. 500 கோடியை நிதியாக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.  டாடா நிறுவனத்தின் இத்தகைய செயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் அடைந்த நிலையில், அரசு மக்களிடமும், நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடை கேட்டது. தமிழக முதல்வர் இந்த வேண்டுகோளை விடுத்த சில நாட்களில் டாடா நிறுவனம் முன் வந்து இந்த உதவியை செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn fights coronavirus tata donates 40032 pcr kits to tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X