குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமம் பற்றிய ஆய்வில் ஆய்வர்கள் 5 வெவ்வேறு வாழ்க்கைமுறை உள்ள குழந்தைகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் தொலைக்காட்சி பார்ப்பது உடல் பருமன் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் கர்ப்ப காலத்தில் மாசுக்களின் பங்கு மற்றும் குழந்தைகளிடம் அவற்றின் தாக்கம் என்ற ஒரு ஆய்வை செய்தது. ஸ்பெயினில் உள்ள Barcelona Institute of Global Health (ISGlobal) உள்ள ஆய்வர்கள் INMA Environment and Childhood Project ல் பதிவு செய்யப்பட்ட 1480 குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதிக செலவு இல்லை... உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்!
உடல் சார்ந்த செயல்பாடு, உறக்க நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம், தாவர அடிப்படையிலான உணவு உட்கொள்ளுதல் மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட (ultra-processed) உணவு உட்கொள்வது போன்ற ஐந்து வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களை அவர்கள் ஆராய்ந்தனர்.
குழந்தைகளின் 4 வயதில் அவர்களது வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை அவர்களின் பெற்றோரிடமும் கேட்டு தெரிந்துக்கொண்டனர். மேலும் குழந்தைகளின் 4 மற்றும் 7 வயதில் அவர்களின் உடல் நிறை குறியீட்டை (body mass index) அளவீடு செய்துக் கொண்டனர். மேலும் அவர்களது இடுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் அளவிட்டுக் கொண்டனர்.
Pediatric Obesity என்ற ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் உடல் சார்ந்த செயல்பாடு அதிகம் இல்லாமல் அதிக நேரம் தொலைகாட்சி பெட்டியின் முன் செலவிடும் 4 வயது குழந்தைகளுக்கு அவர்களது 7 வயதில் உடல் பருமனாகும் ஆபத்து, உடல் எடை அதிகரிப்பது மற்றும் metabolic syndrome ஆகியவை வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் தொலைக்காட்சியின் முன் செலவிடும் குழந்தைகள் பல்வேறு ஆரோக்கியமற்ற உணவுகள் (நொறுக்கு தீனி) குறித்து வெளியிடப்படும் விளம்பரங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இது அவர்களை அந்த உணவுகளை உண்ண ஊக்குவிக்கிறது, என ஆய்வர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களின் உடல் சார்ந்த செயல்பாடுகள் குறைகிறது மேலும் இதன் காரணமாக அவர்களது உரக்கமும் தடைபடுகிறது.
கொரோனா ஒழிப்பில் ‘சித்தா’வின் வெற்றி, உலகமே நம்மை திரும்பிப் பார்க்கும்: மருத்துவர் வேலாயுதம் நேர்காணல்
இந்த அய்வின்படி குழந்தை பருவத்தில் போதுமான தூக்கம் எடை கட்டுப்பாடுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.
குறைந்த அளவு தூக்கமும் உடல் பருமன் பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
குழந்தை பருவத்தில் அரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களான குறைந்த அளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவமளிப்பது, தேவையான அளவு நேரம் தூங்குவது, நிறைய பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது ஆகியவை ஆரோக்கியமாக வாழ தேவை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil