Shanthini U.R.
Weight Loss Diet Foods : ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு முறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது. நகர்மயமாக்கலில் வாழ்ந்து வருபவருகளுக்கு ஆங்காங்கே கடைகளில் கிடைக்கும் உணவுகளை வங்கி உண்பது தான் வழக்கம் ஆனால் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாத காரணங்களினால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிடுகிறது.
Weight Loss Diet Foods - நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்
சிறு வயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்டவர்களுக்கு ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது. இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இள வயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.
இதனால் இன்றய தலைமுறையினர் சந்திக்கும் இரு பெறும் நோய்கள் மன அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு (அல்லது) தொப்பை. இந்த இரண்டும் தான் உடல் மற்றும் மனம் சார்ந்த மற்ற நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணம். எனவே உடல் எடையைக் குறைக்க உண்ண வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்
செக்கு எண்ணெய்
சமையலில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்யிலேயே நமக்கு வேண்டிய கொழுப்புச் சத்து கிடைக்கக்கூடும். இவற்றிலும், ரசாயனங்கள் பயன்படுத்தி சக்கையாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை உபயோகிப்பதைவிட பாரம்பர்ய முறையில் தயாராகும் ‘மரச்செக்கு எண்ணெய்யை சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது’. இதனால் சமையலின் தரம், மணம் மற்றும் சுவை அதிகரிப்பதோடு, நம் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
புரத உணவுகள்
புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர்.
உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் சில, தானியங்கள், கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள். முட்டை, ஓட்ஸ், தால், கோழி, மீன், பாதாம் முதலியவை புரதச்சத்து நிறைந்தவை.
தண்ணீர்
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
உலர் பழங்கள்
ஒரு கப் பழங்களை விட அதிகமாக ஒரு கப் உலர் பழத்தில் 5-8 மடங்கு அதிகமான அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.