/tamil-ie/media/media_files/uploads/2019/08/Broccoli-soup.jpg)
weight loss diet tips broccoli soup recipe
Weight loss diet tips broccoli soup recipe in Tamil : உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கும் ஒரே காய் ப்ரோக்கோலி. உடலில் கலோரிகளை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் இதனை சாப்பிட்டு வரலாம். இதில் கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்தும் இருக்கிறது. எனவே இதில் ஆரோக்கியமான சூப் தயாரித்து குடிக்கலாம். ப்ரக்கோலியில் மிகவும் சுவையான சூப் செய்வது எப்படி என்பதை நாம் இங்கே காண்போம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ப்ரோக்கோலியை நறுக்கி போட்டு கொதிக்க விடவும்.
10 நிமிடங்கள் வரை வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும்.
ப்ரோக்கோலியை கொதிக்க விடம்போது அதில் உப்பு சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்.
அப்படி செய்யும்போது ப்ரோக்கலி மிகவும் மென்மையாக மாறும்.
இதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பௌலில் ஊற்றி கொள்ளவும். அதில் தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து பருகலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.