Weight loss diet tips : உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த மற்றும் கலோரிகள் குறைந்த உணவுகளையும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க அனைவராலும் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்வோம்.
Weight loss diet tips கலோரிகளை குறைக்க:
நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் சம அளவு கலோரிகள் இருக்க வேண்டும். புரதம், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்து கொண்டால் போதும்.
பதப்படுத்தப்பட்ட உணவு:
செயற்கை இனிப்பு, நிறம், சுவை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்தால் உடல் எடை குறையும். இந்த உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்:
கார்போஹைட்ரேட் உணவுகள் எல்லாமே உடலில் சர்க்கரையாய் மாறிவிடும். ரிஃபைண்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். வயிறு உப்புசமும் ஏற்படக்கூடும். எனவே இந்த உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை குறைகிறது.
தூக்கம்:
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, திட்டமிடப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், தினசரி யோகா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, நடனம் போன்ற உடற்பயிற்சிகளை செய்தல் அவசியம்.மேலும் நிறைய தண்ணீர் குடிப்பதாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
மேலும் படிக்க : Hair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்… கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்
தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்நிலையில், சிட்ரஸ் பழங்களை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். கிவி, ஆரஞ்சு, ப்ளம்ஸ், திராட்சை, தேன், வினிகர், பாப்பி சீட், ஆலிவ் ஆயில், உப்பு மற்றும் மிளது தூள் சேர்த்து அருமையான சாலட் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடும்போது, உடலில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைந்து உடல் எடையும் குறையும்.