Advertisment

Weight loss foods : இந்த 5 உணவை மட்டும் எடுத்துக்கோங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி!

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yoga Asanas to Reduce Belly

Yoga Asanas to Reduce Belly

Weight loss foods :உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.

Advertisment

அதிகம் சாப்பிட்டால் வயிறு தொப்பை போடும் என்று பலரும் கருதுகின்றனர்.அது அறவே தவறு. எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உணவைத் தவிர்த்துவந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மெலிந்துவிடுவீர்கள். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிடுங்கள்.

Read More: Weight Loss Tips: கிரீன் டீ, பிளாக் காபி, காரட் ஜூஸ்... இவற்றின் பலன் தெரியுமா?

உடல் எடையை படிப்படியாகத் தான் குறைக்க முடியும். ஒரேயடியாக குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், சாப்பிடாமல் வருத்தி உடலைக் கெடுத்துக் கொள்பவர்களே அதிகம். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.

பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக இருந்தாலும் ஓடி, ஆடி ஆக்டிவாக இருந்தால் உடல் பருமனும் உங்களுக்கு ஒரு தொல்லை போல் தெரியாது.

பொதுவாகவே குறிப்பிட்ட வயத்துக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில் அதிக எடை கூடும். பின் நாட்களில் தொப்பையை குறைக்க அனைவரும் பல முயற்சிகள் மேற்கொள்வோம். உடல் பயிற்சி, உணவு முறை மாற்றம் என அனைத்து மாற்றங்களையும் செய்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை தினமும் ஃபலோ பண்ணுங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி.

1. தக்காளி:

கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமகா மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனல கொழுக்கு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது தக்காளி சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.

2. அன்னாச்சி பழம்:

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

3. திராட்சை:

ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

4. இஞ்சி :

தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்

Healthy Life Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment