Weight Loss Tips: கிரீன் டீ, பிளாக் காபி, காரட் ஜூஸ்… இவற்றின் பலன் தெரியுமா?

5 Best Drinks to Lose Belly Fat: இவையெல்லாம் அதிக செலவில்லாமல், வீட்டில் இருந்தபடியே உடல் எடையை பராமரிக்க எளிமையான வழிமுறைகள்.

By: January 12, 2019, 4:14:05 PM

Easy Ways to Lose Belly Fat: உடல் எடை அளவுடன் இருக்க வேண்டியது அவசியம்தான். வயதுக்கும் உடல் அமைப்புக்கும் அதிகமாக எடை அதிகரிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. எனவே உடல் எடை குறித்து பலரும் கவலைப்படுவது இயல்பானதே!

Home Made Weight Loss Diets: உடல் எடையை பராமரிக்க எளிமையான வழிமுறைகள்

உடல் எடையை குறைக்க வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தும் எளிய பானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

கிரீன் டீ

கிரீன் டீ, சிறு சிறு பாக்கெட்டுகளில் குக்கிராமங்கள் வரை இன்று கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் மூலமாக அதன் விற்பனை நிலையங்களில் தரமான கிரீன் டீ விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஒரு மாதத்திற்கு தேவையான அளவு மொத்தமாகவும் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

ஒரு கப், கிரீன் டீ நமது உடலில் 70 கலோரிகளை குறைக்க வல்லது. எனவே உடல் எடைக் குறைப்புக்கு கிரீன் டீயை பலரும் பரிந்துரைக்கிறார்கள். உடல் எடை குறைப்புக்கு தேவையான அன்டி ஆக்சிடென்ட்-களும் கிரீன் டீயில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உடல் எடை குறித்து கவலைப்படுகிறவர்கள், தயங்காமல் கிரீன் டீயை முயற்சித்துப் பாருங்கள்.

கேரட் ஜூஸ்

விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த அற்புதமான ஒரு உணவுப் பொருள் கேரட். இதன் ஜூஸை அருந்துவதால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும். இதனால் உடல் எடை கூடுவது தவிர்க்கப்படும்.

காலை உணவுடனோ, மதிய உணவுக்கு முன்னதாகவோ கேரட் ஜூஸ் அருந்துவது சிறப்பு. நாம் அன்றாடம் செல்லும் காய்கறிக் கடையில் நியாயமான விலையில் கிடைக்கும் உணவுப் பொருள் கேரட் என்பதால், இதைத் தவறவிட வேண்டாம்.

பிளாக் காபி

பிளாக் காபி, மிகக் குறைந்த கலோரி, அதாவது ஒரு கலோரி அளவுக்கு கொண்ட ஒரு உணவுப் பொருள். செரிமானத்தை துரிதப்படுத்தும் தன்மையும் இதற்கு இருக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இதை பயன்படுத்தலாம்.

வீட்டில் சுலபமாக கிடைக்கும் ஒரு பொருள். மனித உடலின் தோலுக்கும் நன்மை தரக்கூடியது காபி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது. தினமும் இரண்டு லிட்டர் நீரில் 30 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடித்துவர, அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறும்.

ஆப்பிள் சிடர் வினிகர் மூலமாக பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.

குடிநீர்

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது குடிநீர். சிலர் என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்து பார்ப்பார்கள். உடல் எடை குறையாது. போதுமான அளவு நீர் அருந்துவதால் தேவையான மினரல்கள் கிடைக்கும். செரிமானப் பிரச்னைகள் தீரும். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.

இவையெல்லாம் அதிக செலவில்லாமல், வீட்டில் இருந்தபடியே உடல் எடையை பராமரிக்க எளிமையான வழிமுறைகள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Weight loss tips to lose belly fat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X