Advertisment

Weight Loss Tips: 'ஹாட் பாத்' மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? ஜில்லென்ற ஆய்வின் முடிவு

How to Lose Weight with Hot Water Bath: சூடு நீரில் குளிக்கும் போது, வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் உடலில் உற்பத்தியாகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weight Loss Tips: 'ஹாட் பாத்' மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? ஜில்லென்ற ஆய்வின் முடிவு

How is Hot Water Bath Better than 30 Minutes Walk: உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலருக்கும் அரசுப் பணி கனவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதை எப்படி செய்வது என்பதில் தான் இங்கு குழப்பமே. யார் சொல்வதை பின்பற்றுவது?, என்ன டயட் முறையை பின்பற்றுவது? என்று பல சந்தேகங்கள் மனதில் இருக்கும்.

Advertisment

ஆனால், இங்கு நாம் சொல்லப் போவது டயட் முறையல்ல... பாத் முறை... ஆம், சூடான நீரில் குளிப்பது, நீங்கள் அரைமணி நேரம் செய்யும், வாக்கிங், ஜாக்கிங்கிற்கு இணையானது என்கிறது ஒரு ஆய்வு முடிவு. இதன் மூலம், 30 நிமிடம் நடந்தால் உங்களால் எவ்வளவு கலோரியை எரிக்க முடியுமோ, அவ்வளவு கலோரியை இந்த ஹாட் பாத் மூலமாக எரிக்க முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது.

மேலும் படிக்க - Weight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரியும் ஃபால்க்னர் எனும் மருத்துவர் தான் இந்த ஹாட் பாத் மூலம், கலோரிகளை எரிக்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

இவரது ஆய்வில் 14 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதில், ஒரு குழுவினர் ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளிங் மற்றும் மலையேறுதல் என்று ஈடுபடுத்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர், அதே ஒரு மணி நேரத்திற்கு சுடுநீரில் குளிக்க வைக்கப்பட்டனர். இவ்விரு நடவடிக்கைகள் மூலம், எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், சூடு நீரில் குளித்தவர்களின் உடலில் 130 கலோரி எரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதே அளவிலான கலோரி, ஒருவர் 30 நிமிடம் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செய்யும் போது எரிக்கப்படும் கலோரிகளை சமன் செய்கிறது.

சூடு நீரில் குளிக்கும் போது, வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் உடலில் உற்பத்தியாகிறது. அதிகமாக உற்பத்தியாகும் இந்த வெப்பத்தால், நமது உடலுக்குள் உள்ள வெப்பத்தை சரி செய்ய, அதிக அளவு கலோரிகளை எரிக்க நேரிடுகிறது. இந்த முறையில் தான் 30 நிமிடம் வாக்கிங் செய்யும் ஒருவருக்கு இணையாக, ஒருமணி நேரம் சுடுநீரில் குளிப்பவர்களுக்கும் கலோரிகள் எரிக்கப்படுகிறது.

மேலும், இந்த சுடுநீர் குளியல், உங்கள் தோல், எலும்பு இணைப்புகள் மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. உடலில் உள்ள வலிகள் குறையும். இரத்த ஓட்டம் சீராகும். இன்சோம்னியாவில் இருந்து குணமாகும் வாய்ப்புள்ளது.

ஆனால், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சூடு நீரில் குளிப்பதால் மட்டும் உடல் எடை நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு குறையாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையே உங்கள் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment