முளை கட்டிய தானியம்… தினமும் உங்கள் முதல் உணவு ஏன் இப்படி இருக்க வேண்டும்?

Here’s why you should start your day with a bowl of sprouts: முளைக்கட்டிய தானியங்கள் புரதம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது

உங்கள் நாளை எப்படித் தொடங்குகிறீர்கள், அதாவது நீங்கள் காலையில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் அது நாள் முழுவதும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பாதிக்கக் கூடியது. மேலும், உங்கள் உடற்பயிற்சி இலக்குகள் சரியான உணவுடன் இல்லாவிட்டால் முழுமையடையாது.

எனவே, உங்கள் நாளின் சிறந்த தொடக்கத்தை உறுதிப்படுத்தவும், உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடையவும், அதிக புரதச்சத்து மிகுந்த காலை உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பாத்ரா குறிப்பிட்டுள்ளார்.

“அதிக புரதச்சத்து மிகுந்த காலை உணவு தசை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் தசை நிறையை அதிகரிப்பது, ஆற்றல் செலவுகள் (எரிந்த கலோரிகள்), அதிக ஹார்மோன்கள் சுரப்பு, குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் இரவில் சிற்றுண்டி விருப்பத்தை குறைப்பதன் மூலம் எடை இழப்பை ஆதரிக்கிறது,” என்று பாத்ரா கூறினார்.

முளைகட்டிய தானியங்கள்

பாத்ராவின் கூற்றுப்படி, முளைக்கும் செயல்முறை ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது, முளைக்காத தாவரங்களை விட முளைக்கட்டிய தானியங்கள் புரதம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.

“நீண்ட காலமாக, எனக்கு முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடப் பிடிக்கவில்லை, ஆனால் அதை என் உணவில் சேர்க்க சில சுவாரஸ்யமான வழிகளைக் கண்டேன், அவை முளைகட்டிய தானியங்கள் கொண்ட சீலா அல்லது டிக்கி; இப்போது இந்த சூப்பரான உற்சாகமான காலை உணவை நான் விரும்புகிறேன். என்று பாத்ரா கூறினார்.

முளைகட்டிய தானியங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

*முளைகட்டிய தானியங்களை உட்கொள்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்கிறது. அதிக அளவு வைட்டமின் சி உள்ளடக்கத்துடன், முளைகட்டிய தானியங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களுக்கு சக்திவாய்ந்த தூண்டுதல்களை உருவாக்குகின்றன, அவை நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகின்றன, இறுதியில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. வைட்டமின் ஏ மிகுதியாக இருப்பதால் அவை வழங்கும் அனைத்து ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

*உங்கள் உடலில் நீங்கள் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை உங்கள் சருமம் பிரதிபலிக்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம். முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறீர்கள் மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக்க தேவையான நிறைய ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கிறீர்கள்.

*முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகின்றன. முளைத்தல் குறிப்பாக கரையாத நார்ச்சத்து அளவை அதிகரிக்கத் தோன்றுகிறது. இது மலத்தை உருவாக்கி குடல் வழியாக நகர்த்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

“முளைகட்டிய தானியங்களை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு அதிக வீக்கம் ஏற்பட்டால், சிறந்த செரிமானத்திற்கு, முளைகட்டிய தானியங்களை நன்றாக ஆவியில் வேகவைத்து, வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் நெய்யைச் சேர்த்து சாப்பிடுங்கள்,” என்று பாத்ரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Weight loss mantra sprouts breakfast protein benefits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com