காலையில் கருவேப்பிலை ஜூஸ்: அட, இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே!

Karuveppilai juice benefits: தேவையற்ற விஷயங்களை வெளியேற்றி, தேவையான சத்துக்களை தக்க வைத்துக் கொள்ளும் போது நமது உடல் எடை தானாக குறையும்.

By: Published: July 9, 2020, 7:32:26 AM

Weight loss news in tamil: எடை குறைப்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் சரியான எடையை உங்களால் பேன முடியும். நீங்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக உண்ணும் உணவுகளோடு கறிவேப்பிலை சாற்றையும் அருந்த தொடங்குங்கள். கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலிலுள்ள நச்சுக்களை அகற்றும் மேலும் உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவும். இது குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.

curry leaves for weight loss: செய்முறை

ஒரு பிடியளவு கறிவேப்பிலை இலைகளை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் புதினா அல்லது கொத்தமல்லி தளைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பச்சை சாறுகள் எப்போதும் காரத்தன்மை கொண்டவை. உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த சாற்றை தினமும் காலையில் அருந்தி வாருங்கள். உடலுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களையும் இது தரும். இதை தினசரி நீங்கள் சீராக அருந்தி வந்தால் உங்கள் தொப்பை குறைவதை கண்கூடாக காணலாம்.
நம்மில் பெரும்பாலானோர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் போது உணவில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை இலைகளை அதன் பயன் தெரியாமல் ஒதுக்கி வைத்து விடுவோம். மேலும் சிலர் கறிவேப்பிலையை அதன் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்துவர், ஆனால் அதை உண்ண மாட்டார்கள். எனவே கறிவேப்பிலையை சாறாக அருந்துவது சிறந்தது. மேலும் கறிவேப்பிலை சில முக்கியமான ஆரோக்கிய கூறுகளை (healthy components) நமது உடலில் சேர்க்க உதவும்.

பச்சையாக, இலையாக நாம் சாப்பிடும் அனைத்தும் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும். நமது உடலில் உள்ள தேவையற்ற விஷயங்களை வெளியேற்றி, தேவையான சத்துக்களை தக்க வைத்துக் கொள்ளும் போது நமது உடல் எடை தானாக குறையும். மேலும் கறிவேப்பிலை சாறு நமது உடல் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவும்.

இருப்பினும் உங்கள் டயட்டில் இதை சேர்ப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Weight loss curry leaves for weight loss kadi patta leaves

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X