உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்… பாரம்பரிய முறைப்படி செஞ்சு பாருங்க!
Kollu thuvaiyal recipe in tamil: கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன.
Kollu thuvaiyal recipe in tamil: கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன.
Weight loss recipes in tamil: உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய பொருட்களில் கொள்ளு முதன்மையானதாக உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரோக்கியமான உணவை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். மேலும் ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
Advertisment
கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன.
இப்படி பல மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போமா!
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கொள்ளு - 1 கப் எண்ணெய் பெருங்காயம் - 1 துளி அளவு காய்ந்த மிளகாய் - 4, 5 பூண்டு - 7, 9 பள்ளு கருவேப்பிலை - 3 கொத்து தேங்காய் துருவல் - சிறிய கப் 1 புளி - 1 சுண்டக்காய் அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் இட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்ளவும். பிறகு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் முதலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு வதக்கி கொள்ளவும்.
அதன் பின்னர், அவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதில் புளி சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கவும்.
இந்த கலவை நன்கு ஆறிய பிறகு, முன்பு வறுத்து வைத்திருந்த கொள்ளு மற்றும் இந்த வதக்கிய கலவையை அவற்றோடு சேர்த்து ஒரு மிக்சியில் இட்டு துவையலுக்கு ஏற்றார் போல் அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“