Weight loss Tips: உடல் பருமனாக உள்ள எல்லோருக்கும் உள்ள பொதுவான ஆசை, 'வெயிட் குறைந்து சிக்குன்னு ஆக மாட்டோமா' என்று!. யாரும், 'நான் இப்படியே குண்டா இருந்திடுறேன்' என்று சொல்வதில்லை. அப்படியே மீறி சொன்னாலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல், எடை பாரம் மிகுதியாகி குனியவும் முடியாமல், நிமிரவும் முடியாமல் தவிக்கும் தவிப்பில் ஓடோடி வந்து, 'எப்படி சார் வெயிட் குறைப்பது?' என்று கேட்கிறார்கள்.
பொதுவாக, உடற்பயிற்சி செய்தால் மட்டும் உடல் எடை குறைந்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர். 'வாய்ப்பே இல்லை அதற்கு' என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆம்! உணவுக் கட்டுப்பாடோடு கூடிய உடற் பயிற்சிக்கு மட்டுமே மதிப்பு என்கின்றனர். காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் என்று குளிர் காலத்திலும் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்பவர்கள், ஃபுல் மீல்ஸ் ஒன்றை முழுங்கி, மாலை தேங்காய் சட்னியுடன் 2 வடை + 2 பஜ்ஜிக்களை உள்ளே தள்ளுகின்றனர்.
கேட்டால்... 'நல்லா எக்ஸர்சைஸ் பண்றேன். நல்லா சாப்பிடுறேன்' என்று விளக்கம் வேறு.
இது தவறான அணுகுமுறை என்கின்றனர் மருத்துவர்கள். நல்லா சாப்பிட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறும் மருத்துவர்கள், நார்ச் சத்து, புரோட்டீன், நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவைத் தான் நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதைத் தவிர்த்து, கடுமையாக உடற்பயிற்சி செய்தால் நல்லா கட்டு கட்டலாம் என்று யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம் என்று கூறுகின்றனர். அதனால், ஒரு கிலோ எடை கூட குறையாது என்றும், மாறாக உடல் எடை தான் மேலும் கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க - 'ஹாட் பாத்' மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? ஜில்லென்ற ஆய்வின் முடிவு