Quick Weight loss tips to reduce belly fat : உடற்பயிற்சி எபது அன்றாடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று. குழந்தையாக இருந்தாலும் சரி முதியவராக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்திற்கு இது அவசியம்.
Advertisment
முன்னோர் காலத்தில் எல்லாம் ஜங்க் ஃபுட் கிடையாது, ஏதேனும் திண்பண்டம் வேண்டுமென்றாலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக இயற்கை பொருட்களை வைத்து சமைத்து சாப்பிடுவார்கள். அதுவே அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவியது. அது மட்டுமா? சாப்பிடும் உணவிற்கு ஏற்றார் போல் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் வயலில் இறங்கி வேலை செய்தார்கள். அதுவே அவர்கள் ஆரோக்கியத்திற்கான சீக்ரெட்டாக இருந்தது.
Weight loss tips : உடற்பயிற்சி முக்கியம் பாஸ்
ஆனால் இன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்கவும், குடும்பச் செலவுகளுக்காகவே அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அதன் விளைவாகவே இடுப்பு, தொடை மற்றும் வயிறு பகுதிகளில் எல்லாம் கொழுப்பு தங்கி உடல் எடைக் கூடுகிறது.
சிலருக்கு நேரம் இருக்கும் காரணத்தால், ஜிம் மற்றும் யோகா பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு காலை எழுந்தவுடன் இயந்திரம் போல ஓடும் வேலை இருப்பதால், உடலை பற்றி கவனம் கொள்ள முடியாமல் போகிறது. அவர்களுக்கு ஏற்ற உடல் பயிற்சி தான் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’.
இந்த உடற்பயிற்சி செய்வது மிகவும் சுலபம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் இதை செய்வது சுலபமாகிவிடும். இந்த ஜம்பிங் ஜாக்ஸ் 10 நிமிடம் செய்தால் போதும் சுமார் 100 கலோரிகள் சரசரவென குறையும். குறைந்தபட்சம் 250 ஜம்பிங் ஜாக்ஸ் செய்ய 3 நிமிடங்களே ஆகும்.
தினமும், இதனை காலை எழுந்ததும் 3 நிமிடங்களே செய்தால் போதும், வேகமாக தொப்பை குறையும். பழைய ஜீன்ஸ் பேண்ட், மற்றும் ஆடைகள் ஃபிட் ஆனால் உங்களும் மகிழ்ச்சி தானே.