Advertisment

ஆரஞ்சு, வெள்ளரி, நெல்லி... உடல் இளைக்க மருந்து எதற்கு? இந்த ஜூஸ் போதும்!

உங்கள் தினசரி உணவு வழக்கத்தில், சில ஃபிரெஷ் பழ ஜூஸ் சேர்ப்பது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் எடை குறைப்பு பயணத்தில் நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டிய’ 3 பழ ஜூஸ் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss tips in tamil

Three fat burning juices for weigh loss

எடை இழப்பு என்று வரும்போது, ​​​​நாம் அனைவரும் முயற்சிக்கும் பல உணவுகள் உள்ளன. அந்த பட்டியலில்’ கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று பழ ஜூஸ்! உங்கள் தினசரி உணவு வழக்கத்தில், சில ஃபிரெஷ் பழ ஜூஸ் சேர்ப்பது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. பழ ஜூஸ்’ பரந்த அளவிலான தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாகும்.

Advertisment

அந்தவகையில் உங்கள் எடை குறைப்பு பயணத்தில் நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டிய’ 3 பழ ஜூஸ் உள்ளன.

ஆரெஞ்சு ஜூஸ்

publive-image

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, கலோரிகளை எரிக்க உதவுகிறது. எடை இழப்புக்கு மிகவும் விரும்பப்படும் பழங்களில் இதுவும் ஒன்று.

ஆரஞ்சு மற்றும் துளசி ஆகியவை இணைந்து’ ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானத்தை உருவாக்குகின்றன. அதனுடன் ஐஸ் சேர்த்தும் நீங்கள் பருகலாம்.

ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து, மிக்சியில் ஜாரில் போட்டு, சில நொடிகள் அரைக்கவும். பின்னர் அதை ஒரு டம்ளரில் வடிகட்டி’ அதனுடன் சில துளசி இலைகள் சேர்த்து பருகவும்.  

வெள்ளரி ஜூஸ்

publive-image

வெள்ளரி 92 சதவீதம் நீரை உள்ளடக்கியது.  இது லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, உள்ளிருந்து ஒரு பிரகாசத்தையும் தருகிறது!

வெள்ளரி ஜூஸ்’ உங்களை விரைவாக நிரப்புகிறது. நீங்கள் அதனுடன் சில புதினா இலைகளை சேர்த்து ,கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து ஜூஸ் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் -

வெள்ளரி - 1 (உரித்து, நறுக்கியது)

புதினா இலைகள் - 8-10 (நறுக்கியது)

கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)

செய்முறை

அனைத்து பொருட்களையும், மிக்ஸி ஜாரில் சேர்த்து’ ஒரு மென்மையான நிலைத்தன்மை வரும் வரை நன்கு அரைக்கவும்

கருப்பு மிளகு, எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சளி மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

நெல்லி ஜூஸ்

publive-image

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, பைரிடாக்சின், ரைபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் சோடியம், பொட்டாசியம், கரோட்டின், கால்சியம், தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன.

இது செரிமானத்திற்கு உதவுகிறது, உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

நெல்லி ஜூஸூடன்’ நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஒரு துளி தேன் சேர்க்கவும்.

ஆரஞ்சு, வெள்ளரி போலவே’ நெல்லியையும் விதைகளை நீக்கி’ சிறு துண்டுகளாக வெட்டி மிக்சி ஜாரில் போட்டு’ தேவையான அளவு தண்ணீர் சேர்த்து’ மென்மையாக அரைக்கவும். பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி’ அதனுடன் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்து பருகவும்.

உங்கள் எடை குறைப்பு பயணத்துக்கு இந்த 3 ஜூஸையும் கண்டிப்பா டிரை பண்ணுங்க!

உங்கள் உணவில் ஏதேனும் புதிய பொருட்கள் அல்லது பழச்சாறுகளைச் சேர்ப்பதற்கு முன், தயவுசெய்து மருத்துவ நிபுணரை அணுகவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Weight Loss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment