உடல் பருமன் இன்றையை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படவும் அது காரணமாக அமைகிறது. அத்தகைய சூழலில், நம்மில் பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், எந்த முயற்சியை செய்தும் பலன் இல்லையே என்ற விரக்தி ஏற்பட்டிருக்க கூடும்.
ஆனால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, தேவையற்ற உணவுகளை குறைத்தாலே உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும். இதற்காகத்தான் Intermittent Fasting என்ற இடைப்பட்ட விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உண்ணாவிரதம்:
நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேர விரதத்தை கடைப்பிடிப்பது உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவிகரமாக அமையும். இரவு உணவை தவிர்த்து விட்டு மாலை 6 மணிக்கே சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. மாலை 6 முதல் காலை 6 மணி வரை சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். நீங்கள் விரதம் இருக்கும் சமயத்தில், உடலில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றும் நடவடிக்கை நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் ரத்த குழாய்களில் கீடோன் என்னும் பொருள் சுரக்கிறது. இது உடல் எடையை விரைந்து குறைக்க உதவும், மேலும் உடலுக்கு தேவையான விட்டமின் டி மற்றும் உடற்பயிற்சி இருந்தால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஷர்மிகா.