Weight Loss Tips: சில மாதங்களாக நோய் தொற்று நம்மை வீட்டிற்க்கு உள்ளேயே முடக்கியுள்ளது. நாம் வீட்டிலிருந்து வேலை செய்துக் கொண்டே வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்கிறோம். இளம்வயதினர் ஆன்லைனிலேயே வேலை செய்து, அதிலேயே படித்து, பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஆன்லைனிலேயே செய்வதால் அவர்களுக்கு சீரான தூக்கம் கிடைப்பதில்லை. கொழுப்பை கரைப்பதற்கு அல்லது தேங்கியுள்ள கொழுப்பை பயன்படுத்துவதற்கான செயல்முறைக்கு உதவுவதற்கும் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்கக்கூடிய உணவுகளை உங்களது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வது அவசியம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும் உணவுகள் பட்டியல்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகள் உட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த அதிசய இலைகளில் காணப்படும் மற்றொரு கலவை Thylakoids ஆகும். இவை பச்சை இலைகளின் குளோரோபிளாஸ்ட்களில் (chloroplasts) அமைந்துள்ள சிறிய பைகள். இவை பசியை குறைத்து திருப்தியை அதிகரித்து, ஆரோக்கியமற்ற உணவுக்கான ஏக்கத்தை குறைக்கும். கீரை, புதினா, கொத்தமல்லி இலைகளின் சாறை தினமும் காலையில் குடிப்பது நாள்முழுவதும் பசியை கட்டுப்படுத்தும்.
காய்கறி சாறு: எடை குறைப்புக்கு காய்கறிகள் ஒரு முக்கிய பங்காற்றுகின்றன. எடுத்துக்காட்டாக சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றின் சாற்றில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்சத்து உள்ளது. இவை உங்கள் வயிறு நிரம்பியுள்ள உணர்வை தந்து அடிக்கடி ஏதாவது நொறுக்கு தீனி உண்பதை குறைக்க உதவும். வைட்டமின் சி சத்து மற்றும் ருசிக்கு இவற்றுடன் புதினா அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
Green Tea – சரியான காலை பானமான க்ரீன் தேனீரில் உள்ள Catechin போன்ற antioxidants வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக இதில் catechins உடனான caffeine இருப்பு எடை குறைப்பு திட்டங்களில் சிறிய மற்றும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கோப்பை க்ரீன் தேனீர் அருந்தலாம்.
பருப்பு வகைகள் (Legumes) – சைவ உணவுகளில் மிகவும் தேவையான புரதத்தை இவை தருகின்றன. மேலும் இவை நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும், குறைந்த glycaemic குறியீட்டைக் கொண்டுள்ளன, மனநிறைவை அதிகரித்து அதிகப்படியான உணவை உண்பதை தடுக்கின்றன. முளைத்த மற்றும் வேகவைத்த பருப்பு வகைகள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை, மேலும் இவற்றை காலை உணவோடு சேர்த்து உண்ணலாம்.
இந்த அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றுவது எடை குறைப்புக்கான வழிமுறை. நல்ல டயட் மற்றும் தேவையான உடற்பயிற்சி ஆகிவை தான் நீண்ட கால நிலையான எடை குறைப்பு மற்றும் பராமரிப்புக்கு உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil