Advertisment

உடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weight Loss Tips Vegetarian Diet Methods

Weight Loss Tips Vegetarian Diet Methods

நட்ஸ் மற்றும் விதைகள்

Advertisment

Weight Loss Tips Vegetarian Diet Methods : பயறுகள் இவ்வகை உணவுகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள ட்ரை கிளைசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.

முழு தானியங்கள் வளமையான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பை கொண்டதாகும் முழு தானியங்கள்.

அதனால் கொழுப்பை நீக்க வேண்டுமானால், உங்கள் தினசரி உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளது.

நட்ஸ் மற்றும் விதைகள் உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் தான். கொழுப்பை நீக்க வேண்டுமானால் கடலை பருப்பையும், பாதாம்களையும் கை நிறைய உண்ணுங்கள். பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற சில விதைகள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்

உடல் எடையை குறைப்பது எனும் ஒற்றை இலக்கை அடைவதற்காக எல்லா வழிமுறைகளையும் நீங்கள் முயற்சிப்பவர் என்றால், சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் கூட அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான உணவு என கருதப்படும் தேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும்.

வயிற்று கொழுப்பையும், தொப்பையையும் குறைக்க தேங்காய் எண்ணெய்யே மிகச்சிறந்த வழி என சொல்கிறார்கள் உடல் ஆரோக்கிய நிபுணர்கள்; தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.

அவகோடா

பழங்களில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று தெரியுமா?  இதனை பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது, சாறாக எடுத்துக் குடிக்காதீர்கள்.

அவகோடா : அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோ இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

மேலும் படிக்க : காளான் ; நோய்களுக்கு காலன் – காளானை சுவைப்போம் ; வாழ்வை ருசிப்போம்

Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment