சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்

How to Lose Belly Fat with Sweet Potatoes : சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறையுங்கள்

By: December 18, 2018, 4:55:19 PM

Weight Loss Tips : சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ்.

இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

Weight Loss Tips : உடல் எடை குறைய டிப்ஸ்

குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளதாலும், அதிக அளவிலான நார்ச் சத்து உள்ளதாலும் இது உடல் ந்டையை குறைக்கவும் உதவுகிறது.ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது.

இத்தனை நல்ல ஊட்டச்சத்து அளிக்கும் பலன்கள் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள காரணத்தால், இதனை உடல் எடை குறைக்க பயன்படுத்தலாம். ஒரே ஒரு கிழங்கு வேகவைத்து சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிவிடும்.

தினமும், தண்ணீர் ஊற்றி வெறும் கிழங்கை மட்டும் தண்ணீரின் உள்ளே போட்டு வேகவைத்து, தோல் உரித்து உப்பு/சர்க்கரை எதுவும் சேர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிப்பதுடன் வயிறு நிரம்பி பசியின்றி இருக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Weight loss tips

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X