/tamil-ie/media/media_files/uploads/2019/08/drinking-water_759_thinkstock.jpg)
Weight Loss Tips,Weight Loss Diet Plan,வயிற்று கொழுப்பு, உடற் பயிற்சி Weight Loss Exercise,Quick Weight
Burn Fat Fast::இன்றைய காலங்களில் நமக்கு இருக்கும் ஒரு முக்கிய சவால் உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பது. கொழுப்பை குறைப்பதற்கு நாம் ஜிம்மிலும், நடை பயிற்சியிலும் அதிகமாக கவனம் செலுத்திகிறோம். இருந்தாலும் நல்ல முடிவு வந்த பாடில்லை.ஆனால் ,எந்தந்த விஷயங்களால் நம்மால் நம் வயிற்றுக் கொழுப்பை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?
உண்மையில், உடல் அரோக்கியதை அதிகரிப்பது ,தேவையில்லாத தீங்கு கொழுப்பை அகற்றுவது, மனம் நிம்மதியுடன் வாழ்வது , கடினமாய் வேலை செய்வது,செல்வங்களை சேர்ப்பது, எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டதே. உதாரணமாக, நாம் மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில் கார்டிசோன் என்கிற ஹார்மோன் நம்மில் சுரக்கும் ..... அது வயிற்று கொழுப்பை கரையாமல் இருக்க செய்யும். இன்று நம்மில் பல பேர் தூக்கத்திற்கான அருமை பெருமைகளை அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது உடம்பிற்கு தேவையான தூக்கம் கிடைக்கப்பெறாமல் போனால், க்ரெலின் ஹார்மோன் அதிகமாய் சுரக்கும், இந்த க்ரெலின் ஹார்மோன் பசியை அதிகமாய் தூண்டும். மேலும் நம்மை சாப்பிட வைக்கும்.
எனவே, நமது உடல் நிலையும்,மனநிலையும்,வாழ்க்கைமுறையும் ஒன்றுதான். நாம் இவற்றில் ஒன்றை இழந்து,இன்னொன்றை பெற முயல்கிறோம் என்றால் நாம் நம்மையே சுய பரிசோதனை தான் செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.