நமது உணவுகளில் பாலின் முக்கியதும் மிகவும் அதிகம். இந்நிலையில் நாம் ஒரு மாதத்திற்கு பாலை எடுத்துக்கொள்வதை மட்டும் நிறுத்தினால், பால் பொருட்கள் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு , வயிறு உப்புதல் ஏற்படாமல் இருக்கும். ஆனால் கால்சியத்தின் அளவு குறையும். இதனால் எலும்புகள் பாதிக்கப்படும்.
இந்நிலையில் இதன் விளைவுகள் நபருக்கு ஏற்றவாறு மாறுபடும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துகள் பாலில் உள்ளது. பாலில், புரத சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இந்நிலையில் பால் எடுத்துகொள்வதை நிறுத்தினால் புரத சத்து குறைபாடும் ஏற்படலாம்.
இந்நிலையில் நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் அதற்கு பதிலாக வேறு வகையான விஷயங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
தாவர வகை பால்: பாதாம் பால், சோயா பால், ஒட்ஸ் மில்க், தேங்காய் பால் எடுத்துகொள்ளலாம்.
கீரை, கேல், புரொக்கோளி வகை உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள், எள்ளு ஆகியவற்றில் கால்சியம் இருக்கிறது.
மீன்: சால்மன், சர்டைன்ஸ், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இதை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“