Advertisment

இட்லி மாவு இல்லையா? கோதுமை மாவில் சாஃப்ட் இட்லி இப்படி ரெடி பண்ணுங்க!

godhumai idli recipe in tamil: இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபியை எப்படி ஈஸியான செய்முறையில் தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
Oct 08, 2021 08:25 IST
wheat idli recipe in tamil: Whole Wheat Soft & Fluffy Wheat Idly in tamil

wheat idli recipe in tamil: கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி செய்து ருசித்திருப்போம். மிஞ்சிப்போனால் கோதுமை தோசை செய்திருப்போம். ஆனால் இட்லி சுடுவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கும். இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபியை எப்படி ஈஸியான செய்முறையில் தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

Advertisment

கோதுமை மாவில் சாஃப்ட் இட்லி தயார் செய்ய முதலில் 1 கப் அளவு (300 கிராம்) கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். இவற்றை ஒரு கடாயில் இட்டு கோதுமை மாவின் வாசம் வரும் வரை வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அவை காய்ந்ததும்,

உளுந்து – 1 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது)

கேரட் – 1 (பொடியாக துருவியது)

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) ஆகிய எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இவற்றை 5 நிமிடங்களுக்கு ஆற வைத்துக்கொள்ளவும்.

publive-image

இதன் பின்னர், முதலில் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை இட்லி மாவுக்கேற்ப கரைத்துக்கொள்ளவும்.

பிறகு மாவுக்கு தேவையான அளவு உப்பு, 1/4 கப் அளவு அதிகமாக புளிக்காத தயிர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இறுதியாக இந்த மாவில் 1/4 ஸ்பூன் அளவு சமையல் சோடாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தொடர்ந்து முன்னர் தயாரித்து வைத்துள்ள தாளிப்பு கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது நமக்கான இட்லி மாவு தயாராக இருக்கும். இவற்றை எப்போதும் போல் இட்லி சுடுவது போல தட்டில் மாவு ஊற்றி (நெய் அல்லது எண்ணெயை தடவி) 7 முதல் 8 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான மற்றும் சாஃப்டான கோதுமை மாவு இட்லி தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு விருப்பமான சட்டினிகளுடன் சேர்த்து ருசிக்கவும்.

இந்த வித்தியாசமான சாஃப்டான இட்லியை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே!!!

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Idli Recipe #Healthy Food Tips #Healthy Food #Lifestyle #Healthy Life #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment