குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா!

வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால், உடனே இதை செய்து அசத்தலாம்.

வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால், உடனே இதை செய்து அசத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gothumai Samosa Recipe, Wheat Samosa

கோதுமை சமோசா

Wheat Samosa Recipe : தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். சர்க்கரை உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதில் சமோசா செய்தால் எப்படி இருக்கும்? வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால், உடனே இதை செய்து அசத்தலாம்.

Advertisment

குட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - அரை கிலோ

Advertisment
Advertisements

முட்டைகோஸ் - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

பட்டாணி - 50 கிராம்

பட்டை - 1

இலவங்கம் - 2

மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

புதினா - ஒரு கட்டு

பச்சைமிளகாய் - 8

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

மணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி!

செய்முறை

புதினா, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட் மற்றும் உருளைகிழங்கினையும் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவை சலித்து, அதனுடன் சிறிது உப்பு, எண்ணெய் அரைத்த விழுது சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

30 நிமிடம் ஆன பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், வேக வைத்த காய்கறிகள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா செய்து கொள்ளவும்.

சப்பாத்தியின் நடுவில் இந்த கலவையை வைத்து, இரண்டு புறமும் சிறிது நீரை தொட்டு ஒட்டி விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சமோசாவைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான், சமோசா ரெடி!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: