எந்தவொரு மருந்தையும், பரிந்துரைக்கப்படும் போது, குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மருந்துகள் நோயாளிகள் மீது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் கண்காணிக்கப்படாவிட்டால், மரணம் கூட ஏற்படலாம். அதனால்தான் மருத்துவர்கள் மருத்துவ வரலாறு (medical history) மற்றும் மருந்து பரிந்துரைக்கும் முன் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என கேட்கிறார்கள்
துரதிர்ஷ்டவசமாக, டெல்லியில் மூன்று குழந்தைகள்’ மொஹல்லா கிளினிக்கில் 'இருமல் சிரப்' பரிந்துரைக்கப்பட்டதால் இறந்தனர். இந்த வழக்கில், டெல்லி அரசு, கிளினிக்கின் மூன்று மருத்துவர்களை பணிநீக்கம் செய்தது. மருந்துகளின் எதிர்வினை காரணமாக குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு குழந்தைக்கு மூன்று வயது, மூன்று குழந்தைகளும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு குழந்தை அக்டோபர் 13 அன்று இறந்தது, மற்ற இரு குழந்தைகளும் அதே மாதத்தில் இறந்தன.
ஆனால் இருமல் சிரப் எப்போது உயிருக்கு ஆபத்தானது மற்றும் மருந்தின் அளவைப் பற்றி பெற்றோர்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? பதில்களுக்காக மருத்துவர்களை அணுகினோம்.
ஃபரிதாபாத்தில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸின் மூத்த ஆலோசகர், குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜி மருத்துவர் அமித் குப்தாவின் கூற்றுப்படி, இருமல் சிரப்பை ‘சுய மருந்து’ வடிவில் எடுத்துக்கொள்ளக் கூடாது, மேலும் மருத்துவர் தேவைக்கேற்ப அவற்றை பரிந்துரைப்பார்.
"குழந்தை நோயாளிகளுக்கு/குழந்தைகளுக்கு, ’பிரேக் டோஸ்’ முக்கியமானது, மேலும் இது குழந்தையின் வயது மற்றும் எடையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இருமல் சிரப் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட, வெவ்வேறு கலவைகள் (compositions) மற்றும் வெவ்வேறு நேரான கூறுகளுடன் (straight-forward components) வருகிறது.
ஒவ்வொரு கூறுகளுக்கும் வெவ்வேறு வயது வரம்புகள் இருக்கலாம், எடுத்துக்காட்டாக, சிலருக்கு 2 ஆண்டுகள் மற்றும் சிலருக்கு 6 ஆண்டுகள்," என்று அவர் கூறினார்.
ஆனால், அது எப்போது மரணத்தை ஏற்படுத்துகிறது?
மருந்தை அதிகமாக உட்கொண்டாலோ அல்லது ஏற்கனவே இருக்கும் சில மருத்துவ நிலைகள் இருந்தாலோ மட்டுமே மரணம் ஏற்படும். "சில நேரங்களில், ஒவ்வாமை தேவையற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும்," என்று மருத்துவர் குப்தா கூறினார்
பெங்களூர் சர்ஜாபூரில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் லினி பாலகிருஷ்ணன் கூறியதாவது: தவறான அளவுகளில் கொடுக்கப்படும் போது, இருமல் சிரப்கள் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள், மங்கலான பார்வை, கருமை, வலிப்பு, இதயத் துடிப்பு, வாந்தி, மாயத்தோற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். "ஒவ்வொரு வகை சிரப்பும் குழந்தையின் அடிப்படை நிலைமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது."
இருமல் மருந்துகள் "பொதுவாக 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை" என்று மருத்துவர் மேலும் விளக்கினார்.
உங்களுக்கு தெரியும்.. இருமல் மருந்துகள், டிகோங்கஸ்டெண்டுகள் மற்றும் சில ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற பல்வேறு மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் தோன்றலாம். ஆனால், அவற்றில் சில குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
உங்கள் மருத்துவரிடம் பேசி, மருந்தின் நோக்கம், அது எப்படி கொடுக்கப்பட வேண்டும் மற்றும் எந்த அளவு, அளவுகளுக்கு இடையில் அனுமதிக்கப்படும் நேர இடைவெளி, சேமிப்பு முறை, ஏதேனும் சிறப்பு வழிமுறைகள் (உணவோடு அல்லது இல்லாமலோ), ஏதேனும் பொதுவான விளைவுகள் முதலியவற்றை புரிந்து கொள்ளுங்கள். கூடுதலாக, பாட்டிலில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படிக்கவும், ”என்று மருத்துவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது. "அதற்கு பதிலாக, குழந்தைகளை நன்கு நீரேற்றமாக வைத்திருப்பது, கூல்-மிஸ்ட் ஹியூமிடிஃபயர்ஸ் (cool-mist humidifiers பயன்படுத்துதல்) மற்றும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது போன்ற இயற்கை வீட்டு வைத்தியம் செய்யப்பட வேண்டும். குழந்தை நான்கு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், இருமல் சிரப்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில், முற்றிலும் தேவைப்படும் போது மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவை தவிர்க்கப்பட வேண்டும்” என்று மருத்துவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“