வீட்டில் கூடுதலாக சமைக்கப்பட்டு, சாப்பிட்ட பின் மிச்சம் உள்ள உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிடுகிற பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், எந்தெந்த உணவுகளை மறுபடியும் சூடாக்கி சாப்பிடலாம் எந்த உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மிச்சம் உள்ள உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது உணவின் சத்தான தரத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றன. அதிலும், சிக்கன், உருளைக் கிழங்கு, கேரட் போன்ற உணவுகளை மறந்தும் கூட மறுபடியும் சூடாக்கி சாப்பீடாதீர்கள் என்று உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வீடுகளில் மைக்ரோவேவ் ஓவன்களின் பயன்பாடு பரவலான பிறகு, மிச்சம் உள்ள உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது எளிதாகியுள்ளது. உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிடுவது என்பது உணவின் சத்தான தரத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மிச்சமாகும் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்பதால் அந்த உணவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றை மறுபடியும் சூடுபடுத்துவதற்கு முன், எந்தெந்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடலாம், சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என்ற உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
- அசைவ உணவு
அசைவ உணவில் உதாரணத்திற்கு, சிக்கன், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை நல்ல புரத ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால், பழைய அசைவ உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உட்கொண்டால், அந்த உணவு கெட்டுப்போய், செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எப்போதுமே, அசைவ உணவுகளை புதிதாக சாப்பிடுவது நல்லது. அதிக புரத உணவுகளில் நைட்ரஜன் நிறைந்துள்ளது. அதை மீண்டும் சூடுபடுத்திய பிறகு உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.
- அரிசி உணவுகளை மீண்டும் சூடாக்குதல்
உணவு தரநிலை முகமை கருத்துப்படி, பழைய அரிசி உணவை, சாதத்தை மீண்டும் சூடுபடுத்துவது உணவு விஷமாவதற்கு வழிவகுக்கும். அரிசி உணவை மீண்டும் சூடுபடுத்துவது, அரிசியில் வளர்ந்து வரும் பாசிலஸ் செரியஸ் எனப்படும் அதிக எதிர்ப்புத் தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உண்டாகலாம். மேலும், அது உணவை மேலும் மோசமாக்கி நச்சுத் தன்மையுடையதாக்கலாம்
- உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதில் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்ற பாக்டீரியா வளர்ந்து, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அனைத்து சத்துக்களையும் அழித்துவிடும்.
- காளான்கள்
சமைத்த ஒரு நாள் கழித்து காளான்களை சாப்பிடுவதற்காக மிச்சம் அப்படியே வைத்திருக்க வேண்டாம். காளான்கள் புரதச் சத்து மிக்க நல்ல உணவாகும். மேலும், அதில் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால், காளாண் உணவை மீண்டும் சூடாக்குவது புரதங்களை அழித்து உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உருவாக்குகிறது.
- நைட்ரேட் நிறைந்த உணவு
கீரைகள், பச்சை காய்கறிகளான, கேரட், டர்னிப்ஸ், சீமை முள்ளங்கி, பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மிச்சமான பழைய இத்தகைய உணவை மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம், அவை நைட்ரைட்டுகளாகவும் பின்னர் நைட்ரஜனேஸாகவும் மாறும். இது உடல் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதனால், மிச்சமான பழைய உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் கவனமாக இருங்கள். அதிலும், சிக்கன், உருளைக் கிழங்கு, கேரட் போன்ற உணவுகளை மறந்தும் கூட மறுபடியும் சூடாக்கி சாப்பீடாதீர்கள் என்று உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“