நம்மில் பெரும்பாலோர் ஒரு கப் காபி, அல்லது டீ உடன், ஒரு நாளை தொடங்க முற்படுவோம். ஆனால் அவ்வாறு தொடங்குவது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையாக அமையும் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
நமது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்று வரும்போது, சர்க்கரையை வில்லனாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். எனவே, கிடைக்கும் பல வகையான இனிப்புகளைக் கருத்தில் கொண்டு - வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன் மற்றும் நாட்டுச்சர்க்கரை, ஆகியவையில் மக்களுக்கு எது சிறந்தது என்று காணலாம்.
வெள்ளை சர்க்கரை, பிரவுன் சர்க்கரை மற்றும் வெல்லம் அனைத்தும் கரும்பிலிருந்து உருவாக்குகின்றனர் என்ற தகவலுக்கு, உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறியதாவது: “வெள்ளை சர்க்கரை என்பது கரும்பு சாற்றில் இருந்து, வெல்லப்பாகு எடுத்து, அதை இறுதியில் சுத்தீகரித்து தயாரிப்பார்கள்.
நாட்டுச் சர்க்கரையும் இதுபோல் சுத்திகரிக்கப்படுகிறது, ஆனால் வெல்லப்பாகு தனித்தனியாக சேர்க்கப்பட்டு இந்த வகை சர்க்கரையை தயாரிக்கின்றனர். இருப்பினும், வெல்லத்தை தயாரிக்கும்போது அதை சுத்திகரிக்க மாட்டார்கள், அதனால்தான் அதன் ஊட்டச்சத்து பண்புகள் சற்று வித்தியாசமாக உள்ளன,” என்று இந்தியன் எஸ்பிரஸிடம் கூறினார்.
"கலோரிகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை/ நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் எடுத்துக் கொண்டாலும், அவை அனைத்தும் ஒரே கலோரிகளை வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்", என்ற அவர், "இருப்பினும், வெள்ளை அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
செயல்முறையை பொறுத்தவரை, மேல் குறிப்பிட்டுள்ள மூன்று வகை இனிப்புகளும் சமம் என்று கூறுகின்றனர். “எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கலோரிகள் உள்ளன; தேன் மற்றும் வெல்லத்தில் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன" என்று கோயல் கூறினார்.
மேலும், டாக்டர் அஜய் அகர்வால், இன்டர்னல் மெடிசின்-ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் தலைவராக பணிபுரிகிறார். அவர் இதைப்பற்றி கூறியதாவது, "வெல்லத்தில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது, அதாவது வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது இது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்", என்று டாக்டர் அகர்வால் கூறினார்.
இந்த இனிப்புகளில் எதையும் நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் உணவை "ஒட்டுமொத்தமாக" மறுபரிசீலனை செய்வது முக்கியம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil