தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளி்ட்ட நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், இந்த நோய் தொற்று பரவாமல் தடுப்பதில் நாம் முக்கிய பங்காற்ற வேண்டும் என உலகசுகாதார நிறுவனம்(WHO) அறிவுறுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், 100-க்கும் மேற்பட்டநாடுகளில் பாதித்ததிருக்கிறது. கூடும் நிகழ்வுகள், குறிப்பாக நிகழ்ச்சிகள், அலுவலக மீட்டிங்குகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும்போது மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றால், இது போன்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் போன்ற முறைகளில் செயல்பட வேண்டும்.
‘கோவிட் 19-க்கு உங்கள் அலுவலகத்தை தயார் படுத்துங்கள்’ என்ற தலைப்பிடப்பட்ட செய்தி அறிக்கையில், தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளி்ட்ட நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், இந்த நோய் தொற்று பரவாமல் தடுப்பதில் நாம் முக்கிய பங்காற்ற வேண்டும் என உலகசுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள்: ஓடி வந்து தோள் கொடுக்கும் சென்னை பி.சி.வி.சி
இந்த டுவிட்டர் தகவல்கள் அதனைபற்றித்தான் குறிப்பிடுகின்றன.
“#COVID19 பரவுவதற்கான அபாயம் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து மீட்டிங்குகள் &நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்; #COVID19 தொற்று பெரும்பாலானோரிடம் சிறிதளவு தாக்கத்தைக்கொண்டிருக்கும். சிலரிடம் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நோய் தொற்று இருக்க க் கூடிய ஒருவரை, சுற்றி இருக்கும் ஐந்து பேருக்கு #COVID19 தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே அவர்களும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக, நோய் தாக்கம் உள்ளவர்கள் இருமும் போது அல்லது அவர்கள் தும்மலை வெளியேற்றும்போதோ நோய் தொற்று கொண்ட திரவம் வெளியேறி கொரோனா பரவக்கூடும். நோய் தொற்றுக் கொண்ட திரவம் தரையில் உள்ள டேபிள், டெஸ்க் அல்லது தொலைபேசிகள் ஆகியவற்றில் விழும். நோய் தொற்று இல்லாத ஒருவர் இந்தப் பொருட்களை எல்லாம் தொட்டு விட்டு, தம்முடைய கண்களை, மூக்கு அல்லது வாயைத் தொடும்போது அவர்களுக்கும் நோய்தொற்று பரவக் கூடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி, 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களை விட, 40 வயதுக்கு மேற்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் உள்ளவர்கள் அதாவது, சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் எளிதாக பாதிக்கப்படக் கூடும். இவர்கள் அதீத பாதிப்புக்கும் ஆளாக க் கூடும்.
எனவே, மீட்டிங்க்குகள் அல்லது நிகழ்ச்சிகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் மீட்டிங் அல்லது நிகழ்வு தேவைதானா என்பதை கருத்தில் கொள்ளுங்கள். நேருக்கு நேர் சந்திப்பதற்கு பதில், வீடியோ கான்ஃபரன்ஸ் அல்லது ஆன்லைன் முறையில் நடத்தலாமே?
மீட்டிங்கில் பங்குபெறுவோரின் எண்ணிக்கையை குறைத்து சிலர் மட்டுமே பங்கேற்கும் வகையில் செய்யலாம்.
பொது சுகாதாரம் மற்றும் சுகாதார நலன் அதிகாரிகளின் தொடர்பு விவரங்களை முன்கூட்டியே சேகரித்து சரிபார்த்து உறுதி செய்யவும்.
மீட்டிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் டிஸ்யூ பேப்பர்கள், கைகழுவ உதவும் பொருட்கள் கொடுப்பதற்காக முன்கூட்டியே ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொள்ளவும். தும்முதல், சளியை வெளியேற்றும் அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு கொடுப்பதற்கான மருத்துவரீதியிலான முகமூடிகளையும் தேவையான அளவு வைத்திருக்கவும்.
எங்கே COVID-19 பரவியிருக்கிறது என்று கண்காணித்துக் கொள்ளவும். மீட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் அல்லது உடல் நலம் இல்லாதது போன்று உணர்தல் ஆகியவறைக் கொண்டிருந்தால் அவர்களிடம் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முன்கூட்டியே அறிவுறுத்துங்கள்.
மீட்டிங் நடக்கும்போது யாராவது ஒருவர் COVID-19 (வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சோர்வு) போன்ற அறிகுறிகளுடன் உடல் நலகுறைவுடன் இருந்தால், உடனே எப்படி செயல்படுவது என்பதற்கான திட்டத்தை முன்னெடுக்கவும். இந்த திட்டம், கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
யாராவது ஒருவர் உடல் நலக்குறைவாக உணர்ந்தால் அல்லது அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை பாதுகாப்பாகத் தனிமைப்படுத்துவதற்கு ஒரு பகுதியோ அல்லது அறையோ தயார் செய்து வைத்திருக்கவும்.
அறிகுறிகள் கொண்டவர்களைத் தனிப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு பாதுகாப்பாக எப்படி அழைத்துச்செல்வது என்பது பற்றி திட்டமிடுங்கள்.
உங்களுடைய சுகாதார நலன் அமைப்பாளர் அல்லது சுகாதாரத்துறை சார்ந்தவர்களிடம் முன்கூட்டியே சொல்லி திட்டமிடலாம்.
நிகழ்வின் அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், உணவு ஏற்பாடு செய்பவர்கள், பார்வையாளர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களின் தொடர்பு விவரங்களை பெறுவதை உறுதி செய்யுங்கள்; மொபைல் எண், மின்னஞ்சல், அவர்கள் தங்கியிருக்கும் முகவரி, சந்தேகத்துக்கு உரிய வகையில் தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகளிடம் கொடுக்கவும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை மீட்டிங்கில் அல்லது நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.
மீட்டிங் அல்லது நிகழ்வின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் COVID-19 பற்றியும், எல்லோருக்கும் பாதுகாப்பான வகையில் ஒருங்கிணைப்பாளர் எப்படி நிகழ்ச்சியை நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுத்துப் பூர்வமாகவும் மற்றும் நேரிலும் விரிவான தகவல்களை முறைகளைக் கொடுக்கவும்.
கைகுலுக்கி மரியாதை செய்வதை விடவும், இதர வழிகளில் வணக்கம் தெரிவிக்கலாம்.
அனைத்து பங்கேற்பாளர்களும் ஆல்கஹால் சார்ந்த சானிடிசர் உபயோகித்து அடிக்கடி கைகளை கழுவுவதை ஊக்குவிக்கவும்.
இருமும்போது அல்லது தும்மும்போது உடலை வளைத்து தலையை குனிந்து கொள்ளவும் அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகிக்கவும் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தவும். பங்கேற்பாளர்களுக்கு டிஷ்யூ பேப்பர்கள் தரவும், மூடப்பட்ட குப்பைத் தொட்டிகள் மூலம் அவற்றை அகற்றவும்.
பங்கேற்பாளர்கள் சுகாதார அறிவுரைகள் பெறுவதற்கும் அல்லது தகவல்கள் தெரிந்து கொள்வதற்கும் சுகாதாரம் தொடர்பான ஹாட்லைன் நம்பர் அல்லது தொடர்பு தகவல்களை தரவும்.
கூட்டம் அல்லது நிகழ்வு நடவடிக்கைகளை வெளியிடுங்கள் மீட்டிங்கில் பங்கேற்பவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை ஒரு மாத த்துக்காவது வைத்திருங்கள். நிகழ்வு அல்லது மீட்டிங் முடிந்த பின்னர் சிறிது காலத்திலேயே ஒருவர் அல்லது சிலர் உடல் நலக்குறைவோடு இருந்தால், யார் COVID-19-வின் தாக்கத்துக்கு ஆளாகியது என்பதைத் தேடி கண்டறிவதற்கு இந்த தகவல்கள் உதவியாக இருக்கும்.
மீட்டிங் அல்லது நிகழ்வின்போது COVID-19 அறிகுறி குறித்த சந்தேகத்துடன் யாராவது தனிப்படுத்தப்பட்டிருந்தால், ஒருங்கிணைப்பாளர் அது குறித்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தெரியப்படுத்தவும். பங்கேற்பாளர்கள் தங்களைத் தாங்களே ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறதா என்பதை 14 நாட்கள் கண்காணித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தவும். ஒவ்வொரு நாளும் இரண்டு முறை உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தவும்.
அவர்கள் லேசான இரும்பல் அல்லது குறைவான காய்ச்சல் (அல்லது அவர்களின் உடல் வெப்பம் 37.3 சென்டிகிரேட் ஆக அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்) இருந்தால் அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறருடன் அதாவது குடும்ப உறுப்பினர்கள் உட்பட்டோருடன் நெருங்கிய தொடர்பு (ஒரு மீட்டர் அல்லது அதற்கு நெருக்கமாக) கொண்டிருப்பதை தவிர்க்க உதவும். தங்களின் சுகாதார நலன் அலுவலர்களை அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது உள்ளூர் சுகாதார துறை அதிகாரிகளை அணுக வேண்டும். அவர்களிடம் தங்களின் அண்மைகால பயணம் மற்றும் அறிகுறிகளை சொல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.