/tamil-ie/media/media_files/uploads/2020/03/b4.jpg)
chennai news, chennai news today, tamil nadu news today, தமிழ் செய்திகள், tamil lifestyle essay
தனு ஸ்ரீ சிங்
ஏய் நீ ரொம்ப அதிகமாக எதிர்வினையாற்றுகிறாய், அதிலிருந்து வெளியே வா, இது இங்கே நடக்காது. அவரது காபியை குடித்துக்கொண்டே இவ்வாறு குறிப்பிட்டார். நான் கொஞ்சம் ஆழமாக சுவாசித்தேன். அவர் தனது மூன்று வயது பெண் குழந்தை விளையாடுவதற்காக பொம்மை டம்பர் லாரியை வாங்க முயன்றபோது, பெண்கள் தொடர்பான ஒன்றை எடுத்துக்கொள்ளேன் என்று குழந்தையிடம் கூறினார்.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள்: ஓடி வந்து தோள் கொடுக்கும் சென்னை பி.சி.வி.சி
நான் சில நிமிடங்களுக்கு முன்னர்தான், பாலினம் தொடர்பான பாகுபாடுகள் என்பது பழங்கால கிராமப்புற எண்ணங்களாகும் என்று அவரிடம் கூறியிருந்தேன். அது எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும். ஆனால், அவர் என்ன கூறினாரோ, அதற்கு மாறாகவே நடந்துகொண்டார். இப்படித்தான் நகரங்களில் வசிக்கும் நாம், சுதந்திரமாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டே நமது சிறிய பெண் குழந்தைகளை தேவதைகள் என்று கொஞ்சிக்கொண்டும், அவர்களின் அறைகளுக்கு பிங்க் நிறத்தையையுமே தேர்ந்தெடுப்போம். நகரத்தில் வசிக்கும் அம்மாக்களான நாம், பாலினத்தை பாகுபடுத்திக்காட்டும் விஷயங்களை வாங்கிக்குவிக்கிறோம் என்பதை உணராமலேயே இருந்துகொண்டிருக்கிறோம்.
மற்றொரு நாள் அழகுநிலையத்திற்கு பெடிக்யூர் எனப்படும் பாத சிகிச்சை செய்வதற்காக சென்றிருந்தேன். அப்போது, நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியை அவளது பிறந்தநாள் விழாவிற்காக ஒப்பனை செய்து அழகுபடுத்திக்கொண்டிருந்தார்கள். அவள் பிறந்த நாளின் மையக்கரு ஒப்பனை செய்துகொள்வது என்பதுதான் என்று கூறினார்கள். அவளை அழகுபடுத்திவிட்டு, மற்ற பெண் குழந்தைகளையும் அழகுக்கலை நிபுணர்கள் அழகுபடுத்திக்கொண்டிருந்தார்கள். பெண்கள் ஏன் அழகுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஏன் சுயமரியாதையை அழகுக்கு சமமாக பார்க்கிறார்கள் என்று நாங்கள் ஆச்சர்யமடைந்தோம். தனது குழந்தையின் சுருளான முடிகளும், அவளது ஒப்பனைகளையும் பார்த்து அந்தக்குழந்தையின் தாய்க்கு பெருமிதமாக இருந்தது. நான்கு வயதிலேயே அமைதியாக அமர்ந்து ஒப்பனை செய்துகொள்ளும் அக்குழந்தை, கண்களில் மையிட்டு, அதிக கண்முடிகளை பொறுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டும் குழந்தை என்று அக்குழந்தைகளை பார்த்தபோது எனது ஒவ்வொரு செல்லும் வலுவிழந்ததென்பது உண்மைதான்.
பெற்றோர்களாகிய நாம்தான் எந்தெந்த விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்று உணரவேண்டும். என்ன பேசுகிறோம், சிந்திக்கிறோம், எதற்கெல்லாம் தலையாட்டுகிறோம் என்பதை உற்று கவனிக்க வேண்டும். ஒரு ஆண் குழந்தை பள்ளியில் உள்ள சமையல் கிளப்பில் சேர்ந்தால் ஏளனம் செய்வது, பெண்கள், ஆண்கள் வாலிபால் குழுவில் இணைந்தால், சிரிப்பது என்று நாம் பாலின பாகுபாடுகளை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். பாலின பாகுபாடு நம் சமூகத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று.
நம் மகள்கள் மற்றும் மகன்களிடம் தோற்கிறோம். அவர்களிடம் சம உரிமை என்ற பெயரில் நாம் எதிர்பார்க்கிறோம். ஒரு புத்தகக்கடையில் பிங்க் மற்றும் பளபளப்பான புத்தக்கத்தை என் மகன் தேர்ந்தெடுத்தபோது, அக்கடையின் ஊழியர் அவனை இகழ்வாக பார்த்ததை நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கு மட்டும் என்று உள்ள சில புத்தகங்களின் பட்டியலையும் என்னால் மறக்க முடியுமா? அந்த புத்தகத்தில் எந்த பாலின பாகுபாடும் இருக்காது, இருந்தாலும் மக்கள் பெண் குழந்தைகள் படிக்கும் புத்தகம், ஆண் குழந்தைகள் படிக்கும் புத்தகம் என்று பிரித்து கேட்பார்கள். அவர்கள்தான் எது வாங்கினாலும், பெண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நிறம், ஆண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நிறம் என்று பிரித்துப்பார்ப்பார்கள்.
சில உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது
பிங்க், ப்ளூ, பர்பிள் மற்றும் அது தொடர்பான அனைத்து வண்ணங்களும்,
வண்ணங்களுக்கு பாலினம் கிடையாது. ஒரு சிறுவயது பையன் வீட்டில் திரைச்சீலைக்கான வானவில்லின் 7 வண்ணங்களையும் சேர்த்துள்ள எடுப்பான ஒன்றை தேர்ந்தெடுத்தான். அவன் ஒரு ஆண் குழந்தைதான். அவன் தேர்ந்தெடுத்த வண்ணங்களுக்கும், அவனது பாலினத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இது ஊறுவிளைக்காத ஒப்பனை அமர்வு அல்ல
இது பாகுபாடு என்று வலியுறுத்துவோம் . ஒப்பனை பொருட்களோ அல்லது அழகுசாதன பொருட்களோ வாங்குவதற்கு பதிலாக, நாம் நம் குழந்தைகளிடம், ஒப்பனை என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு, அது கட்டாயம் கிடையாது என்று புரியவைக்க வேண்டும்.
என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள், எல்லோரும் எல்லா விளையாட்டையும் விளையாடலாம்
இன்றும் கூட எனக்கு தெரியும், சில தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை குதிரை ஏற்றத்திற்கு அனுப்பமாட்டார்கள். ஏனெனில், குதிரை ஏற்றத்தில் ஈடுபடும்போது அவர்களின் கன்னித்திரை கிழிந்துவிடும் என்பது அவர்களின் கருத்து. இதை முதலில் கேட்டபோது என்னால் பேச முடியவில்லை. இப்போதும் இதுகுறித்து கூற என்னிடம் வார்த்தையில்லை. ஒருவர் மனதால் உணரக்கூடிய கன்னித்தன்மையை நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்களா? அது பெண்களின் தனிப்பட்ட தேர்வு.
பொம்மைகளும், கார்களும்
இது பழமையான ஒன்றுதான். சக்கரம் கண்டுடிபிடித்த காலப்பழமையானது என்று கூட கூறலாம். பொம்மைகள் எவ்வித பாலினத்துடனும் தொடர்பு இல்லாததுதான். ஆனால் அதிலே காணப்படும் பொருத்தமில்லாத நடைமுறைகள் என்பதே விவாதிக்க வேண்டியதுதான். நான் நடப்பதே ஆண் போல் இருக்கிறது என்று இகழப்பட்டுள்ளேன் என்பதே எவ்வளவு வருத்தமான ஒன்று. அதற்கு என்ன வேண்டுமானாலும் அர்த்தமாக இருந்துவிட்டுப்போகட்டும். அதை நான் பார்க்கப்போவதில்லை. பாலின பொருத்தமில்லா பழக்கவழக்கங்கள் என்பதை யார் தீர்மானிப்பது? நான் பெண் என்பதால், பொம்மைகளுடன் விளையாட வேண்டும். ஆனால் ஆண்களுடன் சேர்ந்து நான் கால்பந்து விளையாடினால், நான் பெண் கிடையாது என்று இகழப்படுவேன்.
ஆண் எப்போதும் ஆண்தான்
இந்த ஆண் குழந்தைகளே இப்படித்தான் என்று கூறுபவர்களின் முகத்தில் அறைவதற்கு எனக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்தால், நான் நிச்சயம் கோடீஸ்வரியாகியிருப்பேன். ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான், பெண்கள் எப்போதும் பெண்கள்தான். இருவருமே மனிதர்கள். நாளை உலகை உருவாக்கக்கூடிய இருகரங்கள். பாலின சமத்துவத்தை பேசவே ஒருவருக்கு எல்லையை கடக்க வேண்டிய தைரியம் தேவைப்படுகிறது. ஆண் என்பதற்காக அவனுக்கு மோசமானவனாக இருப்பதற்கு எந்த உரிமமும் வழங்கப்படவில்லை. பெண் எப்போதும், பஞ்சுபோல் மென்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் நமது குழந்தைகளை பாலின பாகுபாடு பார்க்காமல் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். அவர்கள் பாலினம் சார்ந்த அத்தனை உணர்வுகளையும், அனுபவிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு ஆணின் கோபத்தையும் நியாயப்படுத்தக்கூடாது. ஒரு பெண்ணின் கண்ணீரையும் ஏளனப்படுத்தக்கூடாது. ஆணின் கோபத்தைப்போல், பெண்ணின் கோபத்தையும் சமமாக பார்க்க வேண்டும். பாலினம் எதையும் நியாயப்படுத்தவில்லை. நகர்புறங்களில் பாலின பாகுபாடு இல்லையென்று யாராவது கூறினால், அவர்களுக்கு ஒரு நாள் வகுப்பெடுக்கத்தான் வேண்டும். இங்குள்ள ஆண், பெண் பாகுபாடு வெளிப்படையான ஒன்று. பெண்களுக்கு இப்போதும் கோகோ குழுதான். அப்போது, ஆண்கள் மட்டும் கால்பந்தாட்ட மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பார்கள். இது மாற்றத்திற்கான நேரம் அல்லவா?
தமிழில்: R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.