நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளீர்களா? அதற்காக உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துகிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதனை மருத்துவர் சித்தாந்த் பார்கவா உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர், “உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது உங்களை கொழுப்பாக மாற்றும்” என்றார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், “நீங்கள் எடை இழக்கும்போது அல்லது குறைக்க முயற்சிக்கும்போது, நீங்கள் முற்றிலும் கொழுப்பை இழக்க மாட்டீர்கள்.
எனினும், கொஞ்சம் கொழுப்பு, சில தசைகள் மற்றும் சில நீர் தக்கவைப்பை இழக்கிறீர்கள்.
ஆகவே உங்கள் மொத்த கலோரி பற்றாக்குறையை குறைவாக சாப்பிடுவதன் மூலம் மட்டுமே உருவாக்கினால், உங்கள் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com) உடன் பேசிய டாக்டர் சுக்விந்தர் சிங் சாகு, “எடை குறைப்பு பயணம் கலோரி பற்றாக்குறையாக இருப்பது மட்டும் அல்ல.
நம் உடலில் கொழுப்பு, தசை, நீர், தாதுக்கள், போன்ற பல்வேறு கூறுகள் உள்ளன. எனவே, ஒரு நோயாளி எடை இழக்கும் போது, அவர்கள் பொதுவாக அதை கிலோகிராம் வடிவில் பார்க்கிறார்கள்.
இருப்பினும், ஒருவர் கொழுப்பை இழக்கிறாரா அல்லது சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும் தசை நிறை போன்ற பிற முக்கிய கூறுகளை இழக்கிறாரா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்” என்றார்.
தொடர்ந்து, “உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கியமான முறையானது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை இழப்பதை ஊக்குவிக்கும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது” என்று அவர் கூறினார்.
மேலும், "உடல் உடற்பயிற்சி செய்வது முக்கியம், உணவைப் பராமரிப்பதுடன் தசை வலிமையை அதிகரிப்பது முக்கியம், இதனால் ஒருவர் சில கிலோவைக் குறைத்தாலும் உடலின் வளர்சிதை மாற்றம் நன்கு பராமரிக்கப்படும்" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/