பாலூட்டும் தாய்மார்கள், அவர்களின் உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சத்தான உணவைப் பின்பற்றுவது குழந்தைக்கு ஆரோக்கியமான கெட்டியான பால் கொடுக்க உதவுகிறது, இது குழந்தையின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவுகிறது.
பாலூட்டும் கட்டத்தில், தாய்ப்பால் கொடுக்கும் தாயின் உணவில் கூடுதலாக 500 கிலோ கலோரி சேர்க்க வேண்டும். புரதங்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல விகிதத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்றிய ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை தொடரலாம்.
பாலூட்டும் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில ஊட்டச்சத்து ஆலோசனைகள்:
கார்பனேற்ற பானங்கள் மற்றும் ஆல்கஹால் தவிர்ப்பது முக்கியம். அதற்கு பதிலாக நீரேற்றமாக இருக்க, புதிய பழச்சாறுகள், இளநீர், லஸ்ஸி மற்றும் எலுமிச்சை சாறு போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
முழு தானியங்கள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், புதிய பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் கோழி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் குழந்தைக்கு நல்லது.
பாரம்பரியமாக, பாலூட்டும் பெண்களுக்கு உணவுடன் நெய் அதிகமாக வழங்கப்படுகிறது. நெய் எடையை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால், புதிய பழங்கள், பால், தயிர் மற்றும் பழச்சாறுகளுக்கு மாறுவது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும்.
மேலும், பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு 3 மாதங்கள் வரை இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ள வேண்டும்.
பால் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில்’ தண்ணீர் முக்கியமானது. ஒரு நாளைக்கு 16-18 கிளாஸ் தண்ணீர் அருந்துவது முக்கியம், இது பாலின் நிலைத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
வேலை செய்யும் தாய்மார்களுக்கு ஓட்ஸ்-மில் அல்லது கஞ்சி அவசியம். இது சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியாக ஓட்ஸ் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உங்கள் உணவில் பூண்டு சேர்ப்பது சமையலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பால் சப்ளையையும் அதிகரிக்கிறது.
கேரட்டை உங்கள் உணவில் ஒரு அங்கமாக்குவது முக்கியம். கேரட் பீட்டா கரோட்டின் ஒரு சிறந்த மூலமாகும், இது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்:
காஃபின்: அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் குழந்தையின் தூக்கத்தை தொந்தரவு செய்யலாம், ஒரு நாளைக்கு, ஒரு கப் காபி என உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
மது: தாய்ப்பாலுடன் மது கலந்துவிடும் என்பதால், மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பாலூட்டும் தாய்மார்கள் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமான முடிவு. பதப்படுத்தப்பட்ட உணவுகள்’ தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நுகர்வை மோசமாக்குகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் கட்டம் முழுவதும் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். எப்போதாவது ஜங்க் உணவுகளை உண்ணலாம். ஆனால், எப்போதும் வெளியில் வாங்கும் உணவுகளை உட்கொள்வது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். வீட்டில் புதிதாக சமைக்கப்பட்ட உணவு, உங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் அதிசயங்களைச் செய்யும்.
இதையும் படிக்க
கடையில் வாங்கினால் ரொம்ப காஸ்ட்லி.. நீங்களே செய்யலாம்.. ஹோம் மேட் ஆன்டி ஏஜிங் சீரம் ரெசிபி!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“