பெண்மையை போற்று வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உங்கள் வாழ்க்கையின் சரிபாதியாய் விளங்கும் பெண்களை, இந்த பெண்கள் தினத்தில், அவர்களை கவுரவிக்க என்னென்ன பரிசுப்பொருட்களை வாங்கி தரலாம் என்பது தொடர்பான செய்தித்தொகுப்பு உங்களுக்காக…..
Shirt
மிகவும் அழகான, சிறப்புமிக்க இந்த ஷர்ட்டினை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் வாங்கித் தரலாம். சார்ம்யூஸ் வகை சட்டைகளை அனைத்துவிதமான பார்ட்டிகள் மற்றும் ஈவண்ட்டுகளுக்கு அணிந்து செல்ல வசதியாக இருக்கும்.
Bodyshop
அவர்களுக்கு தேவையான பாடிஷாப் பொருட்களை நீங்கள் அவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் விலங்குகளிடம் இருந்து பெறப்படாமல் தாவரங்களில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மேக்-அப் பொருட்கள்
டஸ்கன் சன்ஷைன் கலக்சென்… உங்களின் உற்ற தோழிக்கு வாங்கித் தர சரியான அன்பளிப்பு
காதணிகள்
நம் நாட்டின் பாரம்பரிய அழகுடன் கூடிய வெள்ளிக் காதணிகள். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷோரூம்களிலும் கிடைக்கும் இதை கூட நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு வாங்கித் தரலாம்.
ஆடை
பெண்களுக்கு பலவிதமாக உடைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இது ஒன்றும் ரகசியம் இல்லை. எனவே நீங்கள் ஆடைகள் வாங்கிக் கொடுத்தாலும் கூட அவர்களின் கலெக்சன்களில் அதுவும் ஒன்றாக அமைந்துவிடும்.
கைக்கடிகாரம்
கைக்கடிகாரம் ஒரு பெண்ணை மேலும் “போல்டாகவும், ஸ்டைலிஷாகவும் காட்டுவதன் முக்கிய பங்கு கடிகாரத்திற்கும் இருக்கிறது”. எனவே நீங்கள் இதையும் அன்பளிப்பாக தரலாம்.
ஆயிரம் பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், உங்களின் நேரம், நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் அவருக்கு கொடுக்கும் மரியாதை, முன்னுரிமை, விட்டுக் கொடுக்காமல் வாழ்தல் இதில் தான் அனைத்தும் அடங்கியுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு மட்டும் இது மகளிர் தினம் இல்லை. வீட்டில் இருப்பவர்களும் வேலை ஏதும் செய்யாமல் இல்லை. குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது கடமை என்று நினைக்கின்றீர்கள். ஆனால் அது சம்பளம் ஏதும் இல்லாமல் வாங்கப்படும் வேலை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : Women’s Day 2020 : நதி போல சோர்வடையாத பெண்களுக்கு இனிய வாழ்த்துகள்!