scorecardresearch

மார்பகக் காம்பை சுற்றி சிறு சிறு வீக்கம்: இது ஆபத்தா?

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தால், இந்த சுரப்பிகளின் சுரப்பு உங்கள் தாய்ப்பாலை குழந்தை உட்கொள்ளும் முன் மாசுபடாமல் தடுக்கும்.

Check your breast weekly or after a shower
மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான ப்ரா உங்கள் மார்பக ஆரோக்கியத்திற்கு மோசமானது

உங்கள் மார்பகத்தின் காம்புகளை சுற்றி சிறிய வட்டமான புடைப்புகள் இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு வித்தியாசமாக தோன்றினாலும், இந்த புடைப்புகள் இருப்பது முற்றிலும் இயல்பானது இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இது குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ‘டாக்டர் க்யூட்ரஸ்’ என்று அழைக்கப்படும் டாக்டர் தனயா , மார்பகத்தின் காம்பை சுற்றியுள்ள மார்பகத்தின் நிறமி பகுதியான ஏரோலாவில் புடைப்புகள் உள்ளன. “அவை மாண்ட்கோமெரியின் ட்யூபர்கிள்ஸ் என்று அழைக்கப்படுகின்றன,” என்று விளக்கியுள்ளார்

மருத்துவரின் கூற்றுப்படி, இந்த புடைப்புகள் “மார்பகத்தின் காம்புகளை ஈரமாகவும், உயவூட்டவும் வைத்திருக்கிறது”. “எனவே, இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் போன்றது, இந்த புடைப்புகள் “[புதிதாகப் பிறந்த] குழந்தைக்கு அவர்களின் உணவு எங்கிருந்து வரப் போகிறது என்பதைச் சொல்லும் சில சுவையான வாசனைகளையும் வெளியிடுகிறது” என்று சில ஆராய்ச்சிகளையும் சுட்டிக்காட்ட்டி விளக்கியுள்ளார் டாக்டர் தனயா.

இது தொடர்பாக ஹெல்த்லைன்.காமின் வெளியிட்டுள்ள கூற்றுப்படி, மாண்ட்கோமரியின் டியூபர்கிள்கள் செபாசியஸ் (எண்ணெய்) சுரப்பிகள் ஆகும், அவை கிருமிகளை மார்பகங்களிலிருந்து விலக்கி வைக்கும் வேலையை செய்கின்றன. அதாவது, நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தால், இந்த சுரப்பிகளின் சுரப்பு உங்கள் தாய்ப்பாலை குழந்தை உட்கொள்ளும் முன் மாசுபடாமல் தடுக்கும்.

ஆதனால் இந்த மாதிரி விஷயங்களுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் மார்பக காம்பை சுற்றி காசநோய் விரிவடைவதற்கு காரணமாகின்றன, கர்ப்ப காலம், பருவ வயதை சுற்றியுள்ள பெண்கள், மற்றும் மாதவிடாய் சுழற்சியை சுற்றியுள்ள பெண்களுக்கு அதிகமாக ஏற்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Womens health normal to have bumps around the nipple

Best of Express