இன்று உலக தூக்கம் தினம்! உங்க வயதுக்கு நீங்க எவ்ளோ நேரம் தூங்கணும் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World sleep day

World sleep day

இந்த உலகத்தில் நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எதுக்குன்னு நினைக்குறீங்க... கால் ஜான் வயித்துக்கும், படுத்தா நிம்மதியா தூக்கம் வருவதற்கும் தாங்க. அது இல்லனா எதுக்கு இந்த வாழ்க்க..? சொல்லுங்க!. மார்ச் 16... இன்று உலக தூக்க நாளாம். தூக்கத்தின் அருமையை நாம் உணர்வதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஸ்லோகம் என்ன தெரியுமா? 'Join the Sleep World, Preserve Your Rhythms to Enjoy Life'.

Advertisment

சரி தூக்கத்தின் பயன்கள் என்ன??

யோவ்! தூக்கத்துல என்னய்யா பயன் இருக்கு? தூங்கினா தான் நாம காலையில ஃப்ரீயா இருக்க முடியும். இல்லனா கண்ணு சிவப்பாகி, ஒரே தூக்கமா வரும்-னு, எல்லோரும் சொல்றது போல நீங்களும் நினைச்சீங்கனா, அப்போ இன்னும் நீங்க அப்டேட் ஆகலன்னு அர்த்தம். உங்களுக்கு தான் இந்த கட்டுரை.

பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று என்ன கூறுகிறது தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளார்களாம். தினம் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனராம். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறுகிறது அந்த ஆய்வு.

Advertisment
Advertisements

90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி, ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம்.

வயதுக்கேற்ற தூக்கம்

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் .

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை. ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டுமாம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் கூறுகின்றனர்.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

26லிருந்து 64 வயது வரை: மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

65 வயது - அதற்கு மேல்: ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை. ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: