Chaitra Reddy : ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தின் மூலம், வில்லியாக நடித்தவர் சைத்ரா ரெட்டி.
லாக்டவுன் கால சமையல் : ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் செஃப் தாமு!
கன்னட சினிமாவில் கதாநாயகியகவும், வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து பிரியா பவானி சங்கர் விலகிய பிறகு, அந்த சீரியலில் நாயகியாக அறிமுகமானார் சைத்ரா ரெட்டி.
யாரடி நீ மோகினி சைத்ரா ரெட்டி
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். தாய் மொழியாக கன்னடத்தைக் கொண்ட இவர், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்தார். ஏர் ஹோஸ்டாராக பணியாற்ற வேண்டும் என்பதே இவரது ஆசை. ஆனால் தற்போது நடிப்பு துறைக்கு வந்த பிறகு அந்த ஆசையை மாற்றிக் கொண்டாராம். ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்ததால், இந்த அழகான வில்லிக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
அழகு பதுமை சைத்ரா
யாரடி நீ மோகினி சீரியலில் சைத்ராவின் உடை மற்றும் ஸ்டைலை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் டிவி முன்பு கூடினர். சைத்ராவுக்கு ஷ்ரவானி என இன்னொரு பெயரும் உள்ளது. இவருக்கு பேட்மிண்டன், கிரிக்கெட் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். உணவு என்றால், தென்னிந்திய உணவும், தாய்லாந்து உணவும் சைத்ராவுக்கு பயங்கர இஷ்டம். இன்னும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது தான், இவரது அடுத்த இலக்காம்.
ஆந்திராவில் 40 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று, குனமடைந்து வருவதாக தகவல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.