2019-20 பட்ஜெட் தனித்தன்மை வாய்ந்தது. அண்மைகாலத்தில் என் நினைவுக்குத் தெரிந்த வரை , பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த பட்ஜெட்டும் நிதி அமைச்சரால் ரத்து செய்யப்பட்டதில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
பட்ஜெட் தாக்கல் தினம் என்பது, ஒரு நிதி அமைச்சருக்கு அவரது பிறந்த தினத்தை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டுக்காக பட்ஜெட் தயாரிப்பது என்பது மறக்கமுடியாத, பெரிதும் முக்கியத்துவம்வாய்ந்த பணியாகும். காலபோக்கில் , பட்ஜெட்டில் கூறப்பட்ட சில அம்சங்கள், மாறுதலுக்கு உட்படுத்தப்படும். அப்படியான நிகழ்வில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒன்று அல்லது இரண்டு அம்சங்கள் விலக்கிக் கொள்ளப்படலாம். சில நடைமுறைக்கு சாத்தியமற்ற திட்டங்களை இரக்கத்துடன் , அதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமல் தாமே முடிவுக்கு வரவும் அனுமதிக்கப்படுகிறது.
உருவாக்குதல், ரத்து செய்தல்
2019-20 பட்ஜெட் தனித்தன்மை வாய்ந்த து. அண்மைகாலத்தில் என் நினைவுக்குத் தெரிந்த வரை , பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த பட்ஜெட்டும் நிதி அமைச்சரால் ரத்து செய்யப்படதில்லை.
பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட திட்டங்களை நான் பட்டியிலிட்டிருக்கின்றேன். பட்ஜெட்டுக்கு பிந்தைய விவாதங்களில் அவை நன்மை பயப்பவையாக பறைசாற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் திரும்பப் பெறப்பட்டன. பிப்ரவரி 1ம் தேதிக்கும் செம்பட்ம்பர் 23-ம் தேதிக்கும் இடையே 2019-20 நிதிநிலை அறிக்கையானது, சந்தேகத்துக்கிடமான கணக்குவழக்குகளைக் கொண்ட ஒரு பாதசாரியின் அறிக்கையாக தரம் குறைந்து போனது.
சீனாவிலிருந்து 12 நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர ஆர்வம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மூத்த குடிமக்களின் நலனுக்காக யோசிக்கிறது மத்திய அரசு - நிர்மலா சீதாராமன்
2019-ம்ஆண்டு ஜூலை பட்ஜெட்டின் திட்டங்கள், பின்னர் திரும்பப் பெறப்பட்டவை;
⦁ வெளிநாட்டு பெரும் முதலீட்டாளர்கள் அதேபோல உள்ளூர் பெரும் முதலீட்டாளர்களுக்கான குறுகிய, நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கான மிகைவரி.
தற்போதைய நிலை; ஆகஸ்ட் 23-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், சரிவிகிதபங்குகள்/ பிரிவுகளின், பிரிவு 111ஏ மற்றும் 112ஏ-ல் முறையே குறிப்பிடப்பட்டிருக்கும் பரிமாற்றத்தில் இருந்து எழும் குறுகிய, நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கு நிதி (எண்-2) சட்டம் 2019-ல் விதிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட மிகைவரி விலக்கிக் கொள்ளப்படுகிறது.”
⦁ வெளிநாட்டு இறையாண்மை பத்திரங்கள் வெளியிடுதல். பட்ஜெட் உரையில் பத்தி 103-ல் கூறப்பட்டபடி, “வெளி சந்தைகளில் வெளிநாட்டு நாணயங்களில், அதன் மொத்த கடன் திட்டத்தின் ஒரு பகுதியை அரசு அதிகரிக்கத் தொடங்கும். உள்ளூர் சந்தையில் அரசின் பத்திரங்களுக்கான, தேவை சூழலுக்கு ஏற்ப ஒரு பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும்.”
தற்போதைய நிலை; தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலும் கைவிடப்பட்டு விட்டது. பொருளாதார உறவுகளுக்கான செயலாளர் அதானு சக்ரவர்த்தி கடந்த செப்டம்பர் 23ம் தேதி பேசுகையில், “ மிகவும் கவனமாக விவாதிக்கவும், திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டிய தேவை (நமக்கு)இருக்கிறது. முறையான அமைப்பு குறித்த திட்டம் பற்றிய பணி இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு சாதக, பாதகங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நடைமுறையானது தொடர்ச்சியானதாக, நீண்டகாலம்பிடிப்பதாக இருக்கிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை, அனைத்து கடன்களும், இப்போதைக்கு ரூபாய் சார்ந்த பத்திரங்களாக இருக்கின்றன.”
⦁ பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு. பட்ஜெட் உரையில் பத்தி 110-ல் உள்ளபடி, “பெருநிறுவனங்களுக்கான வரியைப் பொறுத்தவரை, வரி விகிதங்களை நாங்கள் படிப்படியாகக் குறைப்போம். இப்போது, ஆண்டு வருவாய் 250 கோடி ரூபாய் வரை உள்ள நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை 400கோடி ரூபாய் ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துகின்றேன். இது 99.3 சதவிகித நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும். இப்போது வெறுமனே 0.7 சதவிகித பெருநிறுவனங்கள் மட்டுமே வரி விகிதத்துக்கு வெளியே இருக்கின்றன.
தற்போதைய நிலை; அவசர சட்டம் மூலம் செப்டம்பர் 23-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதில்,”அனைத்து உள்ளூர் நிறுவனங்களும், 22 சதவிகிதம் அளவுக்கு( செஸ், மிகைவரி உட்பட 25.17 சதவிகிதம்) பெருநிறுவன வரி செலுத்த அனுமதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு எந்த ஒரு வரி ஊக்கத்தொகை அல்லது வரி விலக்கு சலுகை கிடையாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். மேலும், இந்த நிறுவனங்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரி எதுவும் விதிக்கப்படாது. எந்த ஒரு புதிய உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் 2019-ம் ஆண்டு அக்டோபர் அம் தேதியன்றோ அல்லது அதற்கு பிறகோ தொடங்கப்பட்டிருந்தால், பெருநிறுவனங்களுக்கான வரியாக 15 சதவிகிதம் (வட்டி விகிதம் 17.01 சதவிகிதம்)செலுத்த அனுமதிக்கப்படுவர்.”
⦁ ஏஞ்சல் வரி
தற்போதைய நிலை; ஆகஸ்ட் 23-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் சீதாராமன் கூறுகையில், “வருமானவரி சட்டம் பிரிவு 56 (2)(viib) ஆனது, வர்த்தக அமைச்சகத்தில் பதிவு செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பொருந்தாது.”
⦁ நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப்பொறுப்புடைமை விதிமீறல் குற்றச்செயல்கள் (நிறுவனங்கள் சட்டம் 2013, ஜூலை 31-ல் திருத்தம் செய்தல்)
தற்போதைய நிலை; ஆகஸ்ட் 23-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் சீதாராமன் கூறுகையில், “வெளியில் நிலவிய ஒவ்வொரு சந்தேகத்தையும் இன்றைக்கு நான் களைய விரும்புகின்றேன். வழக்கின் பாதைக்கு இட்டு செல்வது அரசின் நோக்கம் அல்ல. பெருநிறுவன சமூகப்பொறுப்புடைமை என்பது ஒரு பொது விஷயமாகவே கருதப்படும். ஒரு குற்றவிஷயமாக கருதப்படாது.”
⦁ புதிய internal combustion engine (ICE) கார்களுக்கு பதிவுக்கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படுகிறது. இது ரூ.5000 ஆக அதிகரிக்கப்படும். ICE கார்கள் பதிவு புதுப்பித்தலுக்கு ரூ.15,000 விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது(ஜூலை 26 முதல்)
தற்போதைய நிலை; ஆகஸ்ட் 23-ம் தேதி விலக்கிக் கொள்ளபட்டது.சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “புதிய வாகனங்களுக்கான கட்டணம் 2020-ம் ஆண்டு வரை தள்ளிவைக்கப்படுகிறது.”
துயரங்களின் கோப்பை
எதிர்பாரதவிதமாக, பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட மிகவும் மதிப்பு மிக்க அறிவிப்புகளை வாபஸ் பெற்றதோடு நிதி அமைச்சரின் துயரங்கள் முடிவுக்கு வரவில்லை. சில சுழற்சிகள்-பெரும்பாலும் கட்டமைப்பு பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்னைகள் அழிவை ஏற்படுத்தின. பொருளாதாரத்தைக் குட்டிச்சுவராக்கியது. எண்கள் இடக்குமுடக்காக இருக்கின்றன. துணிச்சலான வார்த்தைகள் அதிக வருவாயை அல்லது செலவினங்களைக் கொண்டிருக்கவில்லை. சிஏஜி வெளியிட்ட மாத கணக்கீடுகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடைசியாக கிடைத்த அக்டோபர் 2019 கணக்கின் படி பட்ஜெட் எதிர்பார்பில் நிகர வருவாய் ரசீதுகள் வெறுமனே 41.4 சதவிகிதம் மட்டுமே. மொத்த ரசீதுகள் 44.9 சதவிகிதம், நிதிப்பற்றாக்குறை 102,4 சதவிகிதமாக இருக்கிறது. வருவாய் பற்றாக்குறை 112.5 சதவிகிதம் மேலும் அதிக செலவு செய்யவோ அல்லது மேலும் கடன் வாங்கவோ நிதி அமைச்சருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
நிதி அளித்தல் அல்லது குழப்பம்
இன்னும், ஜூலை 5-ல் இருந்து நிதி அமைச்சர் பெரும் தொகைகள், துறை ரீதியாக அளிக்கப்படும் என்று அறிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் வங்கிகள் (ரூ.70,000 கோடி); ரியல் எஸ்டேட்(ரூ.25,000 கோடி) என்பிஎஃப்சி மற்றும் எச்எஃப்சி-கள்(ரூ.20,000 கோடி); ஐடிபிஐ வங்கி(ரூ.4,557கோடி); மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி(ரூ.16,000 கோடி).
டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், திரு.ஜோசப் ஃபெல்மான் ஆகியோர், “பொருளாதாரம், அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கி இருக்கிறது,” என்று அவதானித்தாலும் கூட நிதி அமைச்சர், “அதலபாதாளத்தில் இருந்தபடி, பசுமைமைப்பள்ளத்தாக்கைப் பார்த்தபடி இருக்கிறார்.”
தமிழில்; கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.