பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 6

ஐடியா – எஸ்பிரேஷன் (Idea – Expression Dichotomy ) என்ற இருவகை பொருள்கள் பதிப்புரிமையை வரும்.. குறிப்பாக இது எழுத்துரிமை, இசையுரிமை , திரைப்பட உரிமை இவற்றில் வரக்கூடியவை. ஐடியா என்பது ஒருவருக்கு வரக்கூடிய ஒரு யோசனையாகும்..

copy rights and cinema by shankar krishnamurthy phase 6
copy rights and cinema by shankar krishnamurthy phase 6

அறிவு சார்ந்த சொத்துரிமை (இது வரையில், அறிவு சார்ந்த சொத்துரிமை பற்றியும் , அதன் சரித்திரம் , அதன் முன்னோடிகள், அதை சார்ந்த பல உரிமைகள், நுதல் பொருள்கள் என்று பல விஷயங்களை பார்த்தோம்..இன்று அறிவு சார்ந்த சொத்துரிமையை முக்கியமான ஒரு உரிமையை அதாவது பதிப்புரிமையை (காப்பிரைட் ) பற்றி பார்க்க போகிறீர்கள்.

பதிப்புரிமை சட்டத்தில் பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அவற்றின் ஒன்றும் , முக்கியமானதுமான ஒன்றை இப்போது சொல்கிறேன்.

ஐடியா – எஸ்பிரேஷன் (Idea – Expression Dichotomy ) என்ற இருவகை பொருள்கள் பதிப்புரிமையை வரும்.. குறிப்பாக இது எழுத்துரிமை, இசையுரிமை , திரைப்பட உரிமை இவற்றில் வரக்கூடியவை. ஐடியா என்பது ஒருவருக்கு வரக்கூடிய ஒரு யோசனையாகும்.. சிந்தனையில் இருந்து உதிக்கும் அந்த யோசனையை ஒருவர் தனது வாய் மூலமாக ஒருவரிடம் சொல்கிறார் என்று வைத்து கொள்வோம்.. அது காப்பிரைட் சட்ட உரிமைக்கு உட்படாது..

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் ஐந்து

ஆனால் ஒருவரது வாய்மொழி யோசனையை(தனிப்பட்ட முறையில் தரப்படும் ) இன்னொருவர் எழுத்துப்பூர்வமாக எழுதி அதனை வெளியிட்டாலோ அல்லது பதிவு செய்து வைத்திருந்தாலோ அது சட்டத்திற்கு உட்பட்டதாகி விடும்.. அதனால்தான் ஒரு கதாசிரியர் கதையை யாருக்கோ கதையை சொல்வதற்கு முன்பு அதனை எழுத்து வடிவத்தில் கொண்டு வந்து, அந்த கதையை தனக்கே மின்னஞ்சல் செய்து கொள்ளலாம்.. தனக்கே ஒரு ரிஜிஸ்டர் தபால் அனுப்பி கொள்ளலாம்.. அதெல்லாம் ஒரு குறைந்த பட்ச ஆதாரமாக அமையும்.. ஒரு வேளை அது ஒரு தகராறாக மாறும் பட்சத்தில் இந்த ஆதாரம் பயன்படும்.

கதை என்பது ஒரு நாவலாகவோ , கதை வடிவத்திலோ எழுதப்பட்டிருந்தால் அந்த அந்த வடிவத்துக்கான பதிப்புரிமையாகும்.. அதையே திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில், திரைக்கதை என்பது எழுத்து வடிவத்தில் வந்த கதையோடு ஒப்பிட்டு பார்த்து அது எந்த அளவிற்கு அதனுடன் ஒத்து போகிறது என்பதை வைத்தே அது ஒரு காப்பியா இல்லையா என்பதை சொல்ல முடியும்.

ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்பு இதனை மிக சிறப்பாக விளக்குகிறது.. அதனை நான் தனியாக அடுத்த வாரம், அடுத்த பதிவில் எழுதுகிறேன்.. காரணம் அதில் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.. காப்பிரைட் சட்டத்திற்கான கோட்பாடே அதில் அடங்கி விட கூடிய அளவிற்கு அந்த இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பு அமைந்திருந்தது.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 4

காப்பிரைட் சட்டமானது எதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கிறது ?

அசல் தன்மை கொண்ட ஒரு படைப்பிற்கே அங்கீகாரம் அளிக்கிறது.. அதனை ஆங்கிலத்தில் ஒரிஜினாலிட்டி (Originality ) என்று சொல்வோம்.. ஒரிஜினாலிட்டி என்றால் முழுக்க முழுக்க அது ஒரு தனித்தன்மை கொண்ட ஒரு புது விஷயம் என்ற அர்த்தம் இல்லை.. அதாவது நாவெல்டி என்ற காப்புரிமை சட்டத்தின் கீழ் வரும் அர்த்தத்தில் சொல்லப்பட்டது அல்ல..

பாதிப்புரிமையில் ஒரிஜினாலிட்டி என்றால் அந்த படைப்பாளியிடம் இருந்து வெளிப்பட்ட ஒரு படைப்பு, அது அசலானது என்று அர்த்தம். அவரது உழைப்பில், அவரது சிந்தனையில் வந்த ஒரு விஷயம் அது.. அது வேறு ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது அல்ல என்பதே அதன் அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஒரு பெரிய உரையை ஆற்றியிருக்கலாம் .. அல்லது ஒரு புத்தகம் எழுதி இருக்கலாம். அதனை பற்றி இன்னொருவர் எழுதும் போது தனக்கு தெரிந்ததை, புரிந்ததை தனது பாணியில் அவர் விவரிக்கும் போது அது அந்த சிந்தனைவாதியின், படைப்பாளியின் அசல் வெளியாகிறது.. அதற்குள் ஒரு ஐடியா ஒளிந்து இருக்கலாம் .ஆனாலும் அவருக்கு அளிக்கப்படும் காப்பிரைட் அங்கீகாரமானது அவருடைய அந்த எழுத்து படைப்புக்கு மட்டுமே.. அதுதான் ஒரிஜினாலிட்டி என்கிற கோட்பாடு.

அமெரிக்க காப்பிரைட் சட்டம் இன்று உலகத்துக்கே முன்மாதிரியாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.. அந்த சட்டத்தில் ஆங்கிலத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அப்படியே இங்கு கொண்டு வந்துள்ளேன் கீழ்கண்டவாறு.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் மூன்று

Sec. 102. – Subject matter of copyright:
(a) …………………
(b) In no case does copyright protection for an original work of authorship extend to any idea, procedure, process, system, method of operation, concept, principle, or discovery, regardless of the form in which it is described, explained, illustrated, or embodied in such work

இதனை தமிழ்ப்படுத்தி பார்ப்பதை விட இதன் சாராம்சத்தை சொன்னால் புரிந்து கொள்வீர்கள்.. ஒருவரது சிந்தனை, யோசனை, அவர் செய்து காட்ட கூடிய வேலைகள் இவற்றிற்கெல்லாம் காப்பிரைட் வராது.. காப்பிரைட் என்பது முழுக்க முழுக்க படைப்புகளுக்கு மட்டுமே.. அவை எழுத்து வடிவத்தில் வரும்போது எழுத்துரிமை பெறுகின்றன.. Literary Work என்பதாக முதலில் சொல்லியிருந்தேன்.. கவிதைகள் , கதைகள், சிறுகதைகள், எழுத்து வடிவத்தில் உள்ள திரைக்கதைகள் , கடிதங்கள் இப்படிப்பட்ட படைப்புகள் எழுத்துரிமையில் வரும்.

இவை அனைத்துமே படைப்பாளிகளின் கைவண்ணத்தில் விளைந்த அசல் வேலையாக அசல் படைப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே சட்டம் சொல்ல கூடியது.. அதற்கு ஒரு அடிப்படை ஆதாரம் (prima facie ) இருக்க வேண்டும்.. காரணம் ஒருவர் எழுதி வீட்டில் வைத்திருந்தால் கூட எந்த தினத்தில் எப்போது எழுதியிருந்தார் என்பது தெரிய வேண்டும்.. அவர் தேதியிட்டு எழுதியிருந்தால் கூட அதனை நிரூபித்து விட முடியாது.. அவை அச்சில் ஏறி பலரால் படிக்கப்பட்டு இருந்தாலோ, இல்லை ஒரு நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தாலோ கூட போதும்.. இப்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் அவை சுலபம்.. ஒரு மின்னனலில் போட்டு அதனை தனக்கே அனுப்பி கொள்ளலாம்.. தனக்கே ஒரு ரிஜிஸ்டர் தபால் கூட அனுப்பி கொள்ளலாம்.. அந்த தேதி தான் முக்கியம்.. அதில் உள்ள விஷயம் தான் முக்கியம்.. அதனை பிரிக்காமல் சீல் செய்யப்பட்ட கவர் ஆக இருந்தால் அது வலுவான ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 2

சட்ட பள்ளிகளில் காப்பிரைட் சட்டம் நடத்தப்படும் போது திரைப்படைப்புகளில் ஒருவரது படைப்பை இன்னொருவர் எடுத்து கையாள்வது என்பது பற்றிய விஷயத்தில் பல இந்திய , தமிழ் திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.. அவை அனைத்துமே ஆராய்ச்சிக்கு உட்பட்டு , ஒரிஜினல் திரைப்படம் எது, காப்பி அடிக்கப்பட்ட படம் எது என்று ஒப்பிடப்பட்டு பல கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்பாக சொல்லப்பட்டுள்ளன.. இன்னும் சொல்லப்போனால் சட்டம், சட்ட கோட்பாடுகள், நீதி மன்ற தீர்ப்புகள்,சட்டப்பள்ளிகளில் சொல்லப்படுபவையே நீதிமன்றங்களில் கூட மிகவும் கவனமாக பார்க்கப்பட்டு ஆதாரமாக எடுத்து கொள்ளப்படுகிறது.. ஒரு நீதிபதி ஒரு வழக்கை கையாளும் போது , எந்த சாராம்சத்தை கீழ் குற்றம் சாட்டப்படுகிறது..அவற்றிற்கு அடிப்படை ஆதாரம் உண்டா.. என்னென்ன மாதிரியான ஆதாரங்கள் காட்டப்படுகின்றன , ஆவண ஆதாரம் உண்டா என்றெல்லாம் ஆராய்வார்கள்..

சமீபத்தில் (20/09/2019) வெளியான இயக்குனர் கே விஆனந்த் எழுதி (பட்டுக்கோட்டை பிரபாகருடன் கூட்டாக ) இயக்கிய, சூர்யா மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான, நானும் ஒரு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நடித்திருந்த “காப்பான்” திரைப்படமும் இந்த மாதிரி குற்றச்சாட்டுக்கு, ஒரு தேவையில்லாத சர்ச்சைக்கும் ஆளானது..

இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்ததோடு , அப்பீல் வழக்கிலும் கே வி ஆனந்த் வெற்றி பெற்றார்.. அவர் சார்பாக நானே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினேன்.. அது பற்றியும் மிக விளக்கமாக ஒரு தொடரில் எழுதுவேன்..

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 1

இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை…(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..

ஒரு நடிகராக இவர் ‘காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்’ படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Copy rights and cinema by shankar krishnamurthy phase 6

Next Story
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நீதிமன்றம் தலையிட வேண்டும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com