Advertisment

கொரோனா அச்சுறுத்தல் நிஜம்... எதிர்வினைகள் தவறான நம்பிக்கைகளில் முடிகின்றன

இந்த நோய்தொற்றை வைத்து சில வியாபாரங்கள் பெருகிவருவது குறித்து தெரிந்துகொள்வது சுவாரஸ்யமான ஒன்று. இதுபோன்ற தொற்றுநோய் காலங்களில் மாஸ்க், கை சுத்திகரிப்பான்கள், காய்ச்சலை தடுக்கும் மாத்திரைகள் மற்றும் சில மருந்துகளின் விலை ரெக்கைகட்டி பறக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, கொரோனா வைரஸ்

இந்தியாவின் இந்த இன்ப்ளூயன்சா தொற்றுநோய் வரலாறு இருந்தாலும், இப்போது பரவலாக தொற்றி வரும் இந்த கோவிட் – 19 தொற்று குறித்து நாம் அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நாம் உலக அழிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம், அதற்கு ஏற்றாற்போல் எதிர்வினையாற்ற வேண்டும் என்று நம்பிக்கொண்டிருப்பது சுத்த பைத்தியகாரத்தனம். கொரோனா வைரஸ் தொற்றைப்பொறுத்தவரை, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் எதிர்செயல்களில் உணர்ச்சி வேகத்துடன் நடந்துகொள்ளக்கூடாது.

Advertisment

ஷா ஆலம் கான்

பிரான்சில் உள்ள ஓரன் என்ற ஒரு நகரமே சுத்தமாக பிளேகால் நாசமாக்கப்பட்டது. அதனால் அந்நகரத்தில் வசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக ஆல்பர்ட் கேமஸ் கூறுகிறார். கேமசின் நாவலே ஒரு சமூகம், அழிவு சக்தியால் எவ்வாறு தாக்கப்பட்டது என்ற கதையையும், எதற்கு அது சரணடைய மறுத்தது என்பதையும் விவரிக்கும் வகையிலும் இருக்கும். கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோயின் எதிர்பாராத தொடக்கம், மக்கள் மற்றும் நாடுகளிடம் இருந்து வரும் அதற்கான எதிர்வினைக்கும் கேமசின் கதைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.

கொரோனா பாதிப்பு தீவிரமானால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்திக்கும்

இந்த கவலையளிக்கக்கூடிய தொற்று நோய்க்கான எதிர்வினை இந்தியாவில் முன் எப்போது இல்லாத அளவுக்கு உள்ளது. மாநாடுகள், பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. வேகமாக பரவி வரும் வைரசுக்கு பயந்து, பிரதமர் நரேந்திர மோடி வழக்கமான ஹோலி நிகழ்ச்சிகளை நிறத்திவைத்துவிட்டார். விசாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. நாடு முழுவதுமே பூட்டிவைத்துவிட்டதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்க்களையும், கை சுத்திகரிப்பான்களையும் மக்கள் வெறித்தனத்துடன் வாங்கி வருவதும், அவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருவதும் இந்த கொள்ளை நோய் நம்மை மொத்தமாக காலி செய்துவிடுமோ என்ற கூட்டு அச்சத்தை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது. மேலும் இந்நோயை ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைபோன்ற சூழ்நிலையில், அதீத அச்சத்தில் ஏற்படக்கூடிய தவறான நம்பிக்கைக்கும், பகுத்தறிந்து உணரக்கூடிய நிலைக்கும் இடையே சிறிய வேறுபாடே உள்ளது. ஒன்றை வலுப்படுத்துவது, மற்றொன்றை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. இதை கூறும்போது, கோவிட் – 19 என்றழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் உண்மைதான். ஆனால், அதற்கு தவறான நம்பிக்கைகள் அடிப்படையில் நாம் கொடுத்துள்ள எதிர்செயல்கள் தேவையில்லை என்பதை நான் விளக்கிக்கூறிவிடுகிறேன். இந்தியாவில் கொரோனா வைரஸ் மீதான அச்சம் ஏன் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு, மிகைப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு அறிவியல் மற்றும் வரலாற்று ரீதியிலான பார்வை மிக அவசியம்.

உலகில் சளிக்காய்ச்சல் தொற்று என்பது வழக்கமான ஒன்றுதான். 20ம் நூற்றாண்டில் 3 இன்ப்ளுயன்சா தொற்றுகள், குறிப்பிட்ட பத்தாண்டுகள் இடைவெளியில் ஏற்பட்டுள்ளது. அதில் ஸ்பானிஷ் ப்ளு என்றழைக்கப்பட்ட ஏ(ஹெச்1என்1) என்ற வைரஸ் தொற்று கடுமையான ஒன்றாக இருந்தது. 1918-1919ம் ஆண்டில் 50 மில்லியன் மக்கள் இறப்பதற்கு காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஏசியன் ப்ளு 1957 -1958ம் ஆண்டில் ஏ(ஹெச்2என்2) வைரசால் ஏற்பட்டது. மூன்றாவதாக 1968ம் ஆண்டு ஏற்பட்ட ஹாங்காங் ப்ளு ஏ(ஹெச்3என்2) என்ற வைரசால் ஏற்பட்டது. இரண்டும் 1 முதல் 4 மில்லியன் மக்கள் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று தொற்றுகளையும் ஆழமாக பகுத்தாய்ந்ததில், இந்தியச்சூழலில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வெளிப்படுத்துகிறது.

1959ம் ஆண்டு வெளியான உலக சுகாதார அறிக்கைபடி, ஏசியன் ப்ளூ உச்சத்தில் இருந்தபோது கூட, 1957ம் ஆண்டு 44 லட்சத்து 51 ஆயிரத்து 785 பேர் இந்தியாவில் இன்ப்ளுயன்சாவால் பாதிக்கப்பட்டதாக கூறுப்படுகிறது. (அப்போது இந்தியாவின் மக்கள்தொனை 360 மில்லியன் ஆகும்) அதில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 242 பேர்களே இறந்துள்ளனர். இந்தயாவில், மொத்தத்தில் ஆயிரத்து 98 பேர்களே இறந்துள்ளனர் என்று ஐஜிகே மேனன் எழுதியுள்ளார். இந்த தொற்றால், சிங்கப்பூர், மலேசியா மற்றும் சீனாவில் ஏற்பட்ட இறப்பு அளவைவிட இது மிக மிக குறைவாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மக்கள்தொகை அமைப்பு, அநேகமாக மக்களிடம் இப்போதுமுள்ள நோய் எதிர்ப்பு திறன் மிக முக்கியமான பங்களிப்பு செய்திருக்க வேண்டும். ஹாங்காங் ப்ளுவை நாம் ஆய்வறிந்து பார்க்கும்போதும், இதேபோல் தான் உள்ளது. இந்த தொற்று இந்தியாவை 1968ம் ஆண்டு வந்தடைந்தது. அமெரிக்காவில், 33 ஆயிரத்து 800 பேர் இறந்திருந்தனர். ஹாங்காங்கின் மொத்த மக்கள்தொகையில்15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் இந்தியாவில் ஏற்பட்ட இறப்பு விகிதம் மிகமிகக்குறைவு. எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. ஆனால், பல்வேறு பத்திரிக்கைகளும், ஆசியாவில் உள்ள நாடுகளிலே, இந்தியாவில்தான் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது என்பதை உறுதியாக கூறுகின்றன.

இந்த பெரியளவிலான தொற்றுநோய்களைப்போல், மற்ற இன்ப்ளுயன்சாக்கள் வந்தபோதும், அவை இந்தியாவை குறைந்தபட்சமாகவே தாக்கியுள்ளன. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி, 2009ம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்வைன் ப்ளூ (ஹெச்1என்1) 61 மில்லியன் பேரை தாக்கியது. அதில் 1,24,699 பேர் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் 5 லட்சத்து 75 ஆயிரத்து 400 பேர் இறந்துள்ளனர். அதேபோல் இந்தியாவில் 33 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 2 ஆயிரத்து 35 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்தியாவில் இறப்பு மற்றும் தொற்றின் அளவு குறைவாக உள்ளதற்கு காரணம் மீண்டும் அதன் மக்கள்தொகை அமைப்பு மற்றும் மரபணுக்களேயாகும். உலகளவில் ஏற்பட்ட மற்ற தொற்று நோய்களும் இதே வகையில்தான் உள்ளன. 2003ம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் என்ற சிவியர் அக்யூர் ரெஸ்பரேட்டரி சிண்ட்ரோம் மற்றும் 2012ம் ஆண்டு ஏற்பட்ட மெர்ஸ் என்ற மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ட்ரோம் ஆகியவை அதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இந்தியாவின் இந்த இன்ப்ளூயன்சா தொற்றுநோய் வரலாறு இருந்தாலும், இப்போது பரவலாக தொற்றி வரும் இந்த கோவிட் – 19 தொற்று குறித்து நாம் அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நாம் உலக அழிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம், அதற்கு ஏற்றாற்போல் எதிர்வினையாற்ற வேண்டும் என்று நம்பிக்கொண்டிருப்பது சுத்த பைத்தியகாரத்தனம். ஆமாம், அதற்காக நாம் பாதுகாப்பை குறைக்க முடியாது. ஆனால், பொய் பிராச்சாரங்களுக்கு இரையாகிவிடக்கூடாது.

இந்த நோய்தொற்றை வைத்து சில வியாபாரங்கள் பெருகிவருவது குறித்து தெரிந்துகொள்வது சுவாரஸ்யமான ஒன்று. இதுபோன்ற தொற்றுநோய் காலங்களில் மாஸ்க், கை சுத்திகரிப்பான்கள், காய்ச்சலை தடுக்கும் மாத்திரைகள் மற்றும் சில மருந்துகளின் விலை ரெக்கைகட்டி பறக்கும். அனைத்து உணவு மற்றும் மருந்து உரிமம் பெற்றவர்களின் அறக்கட்டளையின் தகவல்படி, மாஸ்க்குகளின் வியாபாரம், ஆண்டு விற்பனை ரூபாய் 200 கோடியில் இருந்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 450 கோடி ரூபாயை கடந்து அதிகரித்துள்ளது. பறவைக்காய்ச்சலுக்காக, பல்வேறு நாடுகள் அதிகளவில் வாங்கிய டாமிப்ளு என்ற மருந்தை கண்டுபிடித்து, தயாரித்த, உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை விற்றதிலிருந்து, முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் 5 மில்லியன்களுக்கும் அதிகமான டாலரை முதலீட்டு லாபமாக பெற்றுள்ளார்.

நமது ஆசிரியர் பயிற்சி கல்வி முறைகள் , உலகத்தரத்துக்கு சீரமைக்கப்பட வேண்டும்

நாம் சீனா, ஜப்பான், இத்தாலியை போன்றோ இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியம். நம்மைப்போன்ற நாடுகளில், சுகாதார சீர்கேடுகள் அரசியல் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தொற்று மக்களின் பயத்தை வெள்ப்படுத்துகிறது. நம் தேசத்தின் ஆரோக்கியத்தை அது தொற்றுநோய்க்கு ஆற்றும் எதிர்வினையால் அளவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை நாட்டில் உள்ள ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையைக்கொண்டே தீர்மானக்க முடியும். துரதிஷ்டவசமாக, நாம், எல்லாமட்டத்திலும், அவற்றில் எல்லாம் தோற்றுவிட்டோம். நமது தேச உணர்வு, டிபி, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நோய்களுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுப்பதிலும் இருக்க வேண்டும். ஏனென்றால், இவைதான் இந்த இன்ப்ளுயன்சா தொற்று நோய்களைவிட அதிகம்பேரை கொல்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றைப்பொறுத்தவரை, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் எதிர்செயல்களில் உணர்ச்சி வேகத்துடன் நடந்துகொள்ளக்கூடாது. நம் அறிவியல் மற்றும் வரலாற்று அறிவின் மூலம் நிலைமையின் தீவிரத்தை மதிப்பிட்டு, நிறுவனங்களுக்கும், அதை நடத்திச்செல்பவர்களுக்கும் இடையே நம்பிக்கையை பராமரிப்பதே தற்போது சிறந்த வழி. கொரோனா வைரஸ் குறித்து பரவிவரும் உலக அழிவுக்கானது போன்ற பிரச்சாரங்களால் ஏற்பட்டுள்ள பீதியை, ஆதாரங்களின் அடிப்படையிலும், அறிவியல் கண்ணோட்டத்துடனும் வழிநடத்த வேண்டும். உணர்ச்சிவேகம், மிகைப்படுத்தல், மிகை விளம்பரம் போன்றவற்றின் மூலம் அல்ல.

தமிழில்: R.பிரியதர்சினி.

Who
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment